“9பந்து 31ரன்.. என்கிட்ட சொல்லிட்டாங்க.. நான் அதுக்கு இப்படி ரெடி ஆனேன்!” – ரிங்கு சிங் மாஸ் பேச்சு!

0
44923
Rinku

இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது. பேட்டிங் வரிசையில் முதல் மூன்று இடங்களில் வந்த ஜெய்ஸ்வால் ருத்ராஜ் மற்றும் இசான் கிஷான் மூவரும் அதிரடியாக அரை சதம் அடித்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் வந்த ரிங்கு சிங் வழக்கம்போல் தன்னுடைய பினிஷிங் அதிரடியில் மிரட்டினார். வெறும் ஒன்பது பந்துகளை சந்தித்த அவர் 31 ரன்கள் குவித்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 235 ரன்கள் இதன் காரணமாக எட்டியது.

இன்று இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் கடைசி நேரத்தில் அவர் காட்டிய அதிரடி வெற்றிக்கு மிகவும் முக்கியமாக மாறி இருக்கிறது.

ஒரு கட்டத்தில் 15 ஓவர்களுக்கு 150 ரன்கள் என்று ஆஸ்திரேலியா வலுவான நிலையில் இருந்தது. இந்திய அணி 210 ரன்கள் என்கின்ற இடத்தில் இருந்திருந்தால், ஆஸ்திரேலியா அணி அதற்கு வேறு விதமாக விக்கெட்டை காப்பாற்றி விளையாடியிருக்கும். மேலும் ஆட்டத்தையும் வென்று இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் போட்டிக்கு பின் பேட்டி அளித்த ரிங்கு சிங் கூறும்பொழுது “நான் எந்த இடத்தில் பேட்டிங் செய்வேன் என்பது தெரிந்த காரணத்தினால், நான் அந்த சூழ்நிலையை உணர்ந்து அமைதியாக இருக்கிறேன். ஒவ்வொரு பந்தும் எங்கு வந்து விழுகிறது என்பதையும், வேகமாக வருகிறதா இல்லை மெதுவாக வருகிறதா என்பதையும் பார்த்து விளையாட விரும்புகிறேன்.

இந்திய அணியில் நான் எல்லோருடனும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மிகவும் நன்றாக உணர்கிறேன். என்னுடைய வேலை ஆட்டத்தை ஃபினிஷிங் செய்வது மட்டுமே. சில நேரங்களில் ஐந்து ஆறு ஓவர்கள் கிடைக்கலாம் சில நேரங்களில் இரண்டு ஓவர்கள் மட்டும் கிடைக்கலாம்.

நான் இதற்கு தகுந்தபடிதான் என்னுடைய பயிற்சியை செய்து வருகிறேன். பயிற்சியாளர் லட்சுமணன் சார் எனக்கு இதை தெளிவாக கூறியிருக்கிறார். எனவே நான் வலையில் இதற்கு தான் பயிற்சி செய்து வருகிறேன்!” என்று கூறி இருக்கிறார்!