89 ரன்களுக்கு 8 விக்கெட்.. ஆஸியை பொட்டலம் கட்டிய இந்தியா.. எல்லா பவுலருக்கும் விக்கெட்.. சென்னையில் விக்கெட் வேட்டை!

0
288
ICT

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் நான்காவது நாளின் ஐந்தாவது போட்டி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்வது என முடிவெடுத்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் மிட்சல் மார்ஸ் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இருவரும் பொறுப்புடன் விளையாடி 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். டேவிட் வார்னர் 41 ரன்கள் வெளியேற, ஸ்மித் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து லபுசேன் 27, அலெக்ஸ் கேரி 0, கேமரூன் கிரீன் 8, பேட் கம்மின்ஸ் 15 ரன்கள் எடுத்து மடமடவென்று தங்களது விக்கெட்டுகளை கொடுத்து ஆஸ்திரேலியா அணியை நெருக்கடியில் தள்ளினார்கள்.

இன்றைய ஆடுகளம் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் எதிர்பார்த்தது போல ஆரம்பத்தில் பேட்டிங் செய்ய நன்றாக இல்லை. பந்து கொஞ்சம் நின்று வர ஆரம்பித்தது. மேலும் விக்கெட் நேரமாக பந்து சுழலவும் செய்தது.

- Advertisement -

இதற்கு பெரிதாகப் பழக்கம் இல்லாத ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் தடுமாற ஆரம்பித்தார்கள். இதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது.

கடைசிக் கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் 35 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கொடுத்தார். ஜாம்பா 6 ரன்களில் வெளியேற ஹேஸில்வுட் 1* ரன் எடுத்து களத்தில் நின்றார். ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் தரப்பில் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்களுக்கு 2 மெய்டன்கள் உடன் 28 ரன்கள் தந்து 3 விக்கெட் கைப்பற்றினார். பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். சிராஜ், அஸ்வின், ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த போட்டியில் இந்திய அணியின் தரப்பில் பந்து வீசிய எல்லோரும் விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்!