8 பவுண்டரி 4 சிக்சர்..திலக் வர்மா 2வது அதிரடி சதம்.. ஹைதராபாத் வெற்றி முகம்.. ரஞ்சி டிராபி 2024

0
280
Tilak

2024 மற்றும் 2025 ரஞ்சி சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வருகிறது. அப்பொழுது எல்லா அணிகளும் தங்களது மூன்றாவது ஆட்டத்தை விளையாடி வருகின்றன.

இதில் பிளேட் பிரிவில் இடம் பெற்றுள்ள ஐதராபாத் மற்றும் சிக்கிம் அணிகள் மோதிக்கொண்ட ரஞ்சி போட்டி தற்பொழுதுஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற அனுபவம் குறைவான சிக்கிம் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்துக் கொண்டது. பின்பு அதற்கான பலனையும் அனுபவித்தது.

முதலில் பேட்டிங் செய்த சிக்கிம் அணியால் நூறு ரண்களை எட்ட முடியவில்லை. அந்த அணி மொத்தமாக 27.4 ஓவர்கள் மட்டும் விளையாடி வெறும் 79 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

ஹைதராபாத் அணியின் தரப்பில் பந்துவீச்சில் தனய் தியாகராஜன் சிறப்பாக பந்துவீசி ஆறு விக்கெட்டுகளும், சாமா மிலிந்த் நான்கு விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து களம் இறங்கிய ஹைதராபாத் வீரர்கள் அனுபவம் இல்லாத சிக்கிம் பந்துவீச்சு யூனிட்டை அடித்து நொறுக்கினார்கள். வருகின்ற எல்லா வீரர்களுமே அதிரடியில் ஈடுபட்டார்கள்.

சிக்கிம் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் தன்மய் அகர்வால் 125 பந்துகளில் 137 ரன்கள், ராகுல் சிங் 64 பந்தில் 83 ரன்கள், ரோகித் ராயுடு 111 பந்தில் 75 ரன்கள், சந்தன் சஹானி 56 பந்தில் 54 ரன்கள், கேப்டன் திலக் வர்மா 11 பந்தில் 103 ரன்கள் என எல்லோரும் அமர்க்களப்படுத்தினார்கள்.

இறுதியாக ஹைதராபாத் அணி 78.1 ஓவர்கள் மட்டும் விளையாடி, நான்கு விக்கெட் இழப்புக்கு 463 ரன்கள் எடுத்து, அதிரடியாக டிக்ளேர் செய்தது. 384 ரன்கள் பின்தங்கி இருந்தது.

இந்த நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய சிக்கிம் அணி மேற்கொண்டு 50 ரன்களை ஏற்றுவதற்கு முன்பாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்து தற்பொழுது தடுமாறி விளையாடிக் கொண்டு இருக்கிறது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது. மேலும் இந்த போட்டியில் ஹைதராபாத் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.