75 பந்தில் சதம்.. 12 பவுண்டரி 9 சிக்ஸர்… ஐபிஎல் கொல்கத்தா பவுலர் பேட்டிங்கில் அதிரடி!

0
1128
Harshit

ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடர் துலிப் டிராபி நடந்து வருகிறது. தற்பொழுது இந்தத் தொடரில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெறும் ஒரு காலிறுதிப் போட்டியில் வடகிழக்கு மண்டலமும், வடக்கு மண்டலமும் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வடகிழக்கு மண்டலம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த வடக்கு மண்டலத்திற்கு டெல்லிக்காக விளையாடும் துருவ் சோரி மற்றும் ஹரியானாவை சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டு இருக்கின்ற 19 வயதான இளம் வீரர் நிஷாந்த் சிந்து ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்கள்.

இதைத்தொடர்ந்து டெல்லிக்காக விளையாடி வரும் 21 வயதான வலது கை வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா வடக்கு மண்டல அணிக்காக அதிரடியாக விளையாடி 75 பந்துகளில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

ஹர்ஷித் ராணா அதிரடியாக 86 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 122 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 540 ரன்கள் குவித்து வடக்கு மண்டல அணி ஆட்டத்தை முடித்துக் கொண்டது. தொடர்ந்து விளையாடும் வடகிழக்கு மண்டல அணி 26 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

- Advertisement -

ஹர்ஷித் ராணா ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அடிப்படை விலையான இருபது லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டு, இந்த ஆண்டு ஆறு போட்டிகளில் வாய்ப்பு பெற்று 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவரது பந்துவீச்சு பல முன்னாள் வீரர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. மேலும் நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இவரை சேர்க்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கில் ஓரளவுக்கு செயல்படக்கூடிய வேகப் பந்துவீச்சாளர்கள் கிடைப்பது என்பது எல்லா அணிக்குமே பெரிய விஷயம்தான்!