கேப்டன்சியை விட்டு 700 நாட்கள்.. கோலி இடமே இருக்கும் ரெக்கார்ட்.. இப்பவாச்சு அவரின் அருமை பிசிசிஐக்கு புரியுமா.!

0
2706

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியுற்று மண்ணைக் கவ்வியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆள் அவுட்டானது. கே எல் ராகுல் நிதானமாக விளையாடி சதம் அடித்தார். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு டீன் எல்கரின் மிகச் சிறப்பான ஆட்டத்தால் 408 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய டீன் எல்கர் 185 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கே எல் ராகுல் இந்த முறை பங்களிப்பை அளிக்க முடியாமல் போனதால் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விராட் கோலி மட்டுமே 76 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றினார். இதனால் தென்னாபிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற வரலாற்று சோகம் தொடர்கிறது. 1992 முதல் தொடர்ந்து 8 முறை முயற்சி செய்தும் தற்போது வரை தோல்வியடைந்து வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்க அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதன்மூலம் SENA நாடுகளில் டெஸ்ட் போட்டியை வென்ற கடைசி இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருக்கிறார். SENA நாடுகள் என்பது தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் குறிக்கிறது. இந்திய அணி கடைசியாக விராட் கோலி தலைமையில் 2021ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

பின்னர் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பு, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தார். பின்னர் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையில் இந்திய அணி தோல்வி அடைந்தது. பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையில் விளையாடிய இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது.

ஆனால் 2021ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை வகித்தது. பும்ரா தலைமையில் விளையாடி தோல்வி அடைந்ததன் மூலம் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-2 என சமன் செய்தது.

அதற்குப் பின்னர் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 207 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இரண்டாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பறிகொடுத்தது.