இந்திய கிரிக்கெட்

2025 சாம்பியன்ஸ் டிராபி.. ரூல்டு அவுட் ஆன 7 நட்சத்திர வீரர்கள்.. சுவாரசியம் குறையும் தொடர்

பாகிஸ்தான் மற்றும் துபாய் என இரு நாடுகளில் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் இருந்து 7 நட்சத்திர வீரர்கள் காயத்தின் காரணமாக விளையாட முடியாமல் வெளியேறியிருக்கிறார்கள். இது இந்த தொடரின் சுவாரசியத்தை பெரும் அளவில் குறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

இன்னும் சில நாட்களில் பிப்ரவரி 19 முதல் பாகிஸ்தான் மற்றும் துபாய் இரு நாடுகளில் ஐசிசி சாம்பியன்ஸ் தொடர் துவங்க இருக்கிறது. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாய் மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஏழு வீரர்கள் காயத்தின் காரணமாக வெளியேறி விட்டார்கள்.

பெரிய அளவில் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியா அணி

இதில் பெரிய அளவில் ஆஸ்திரேலியா அணி பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த அணியின் கேப்டன் முதல் ஃபாஸ்ட் பௌலிங் யூனிட்டின் மிக முக்கியமான பந்துவீச்சாளர்கள் என மொத்தம் நான்கு வீரர்கள் காயத்தின் காரணமாக வெளியேறி இருக்கிறார்கள். இதில் கேப்டன் பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் என முழுவதுமாக வேகப் பந்துவீச்சு யூனிட் காலியாகி இருக்கிறது.

இத்தோடு துவக்க ஆட்டக்காரர் மற்றும் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ஸ் காயத்தின் காரணமாக வெளியேறிவிட்டார். மேலும் மிகப்பெரிய பின்னடைவாக இன்னொரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து அதிரடியாக ஓய்வு பெற்று விட்டார். இப்படி மொத்தம் ஐந்து நட்சத்திர வீரர்கள் ஆஸ்திரேலியா அணியில் இருந்து மட்டுமே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியாமல் போய் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு

இந்திய அணிக்கு தனி ஒரு வீரராக 50 சதவீத தாக்கத்தை உருவாக்கக்கூடிய வீரரான நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் பும்ரா காயத்தின் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை. இது இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்வதில் பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது என்று கூறலாம்.

இதையும் படிங்க: விராட் கோலி கிட்ட யாராலும் இதை கேட்க முடியாது.. கிங் ஆனா இதை மட்டும் செய்யுங்க – ஆகாஷ் சோப்ரா வேண்டுகோள்

மேலும் இவர்களோடு தென் ஆப்பிரிக்காவின் அதிவேக பந்துவீச்சாளரான அன்றிச் நோக்கியா காயத்தின் காரணமாக வெளியேறி இருக்கிறார். மேலும் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான அல்லாஹ் கசன்பர் காயத்தின் காரணமாக சாம்பியன் டிராபி தொடரில் மட்டும் இல்லாமல் ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by