விராட் கோலி கிட்ட யாராலும் இதை கேட்க முடியாது.. கிங் ஆனா இதை மட்டும் செய்யுங்க – ஆகாஷ் சோப்ரா வேண்டுகோள்

0
42
Virat

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இடம் இப்பொழுது ஒரு முக்கியமான விஷயம் குறித்து யாரும் கேட்க முடியாது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.

தற்போது இந்திய அணி உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

மந்திரக்கோல் எதுவும் இல்லை

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” விராட் கோலி மீண்டும் பாம்பு திரும்ப என்ன செய்ய வேண்டும்? அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங் டச்சில் நல்ல முறையில் இருந்தார். இருந்தபோதிலும் இந்த முறையில் ஆதில் ரஷீத் விராட் கோலியை ஆட்டம் இழக்க செய்தார். பந்து திரும்பியதால் விராட் கோலி எட்ஜ் எடுத்து ஆட்டம் இழந்தார்”

“என்னிடம் மந்திரக்கோல் எதுவும் கிடையாது. அப்போது ஒரு நாள் கிரிக்கெட் நடந்து கொண்டிருப்பதால் ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்தை விராட் கோலி விளையாட வேண்டாம் என்று கேட்க முடியாது. நீங்கள் இப்படி வெளியில் இருக்கும் பந்தில் ரன்கள் எடுக்கத்தான் வேண்டும். அதற்கு மேலும் பந்து வெளியில் இருந்தால் அது அகல பந்து என்று நடுவரால் அறிவிக்கப்படும்”

- Advertisement -

விராட் கோலி இதை செய்ய வேண்டும்

“விராட் கோலி இப்படி வெளியில் இருக்கும் பண்புகளை மென்மையான கைகளால் விளையாடி சிங்கிள் ரன்கள் எடுப்பதற்கு பார்க்க வேண்டும். அவர் ஆரம்பத்தில் டிரைவ் விளையாடுவதற்கு பதிலாக மென்மையான கைகளால் விளையாடி ஒன்று இரண்டு என ரன்கள் எடுத்துக் கொண்டு வருவது முக்கியமானதாக இருக்கும்”

இதையும் படிங்க : கோலி ரோகித் லட்சம் ரன் எடுத்தாலும்.. ஆனா இத செய்யணும்.. இது குடும்ப சுற்றுலா இல்ல – கபில் தேவ் விமர்சனம்

“விராட் கோலியின் கடைசி டெஸ்ட் சதம் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் வந்தது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்திருந்தால். இங்கு வரும்பொழுது எல்லாம் அவர் பெரிய ரன்கள் குவிக்கிறார் என்று கிடையாது. ஆனாலும் ரன்கள் எடுப்பதற்கு நல்ல இடம் எதுவென்று கேட்டால் இந்த மைதானத்தை கூறலாம். எனவே இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி இந்த ரன்கள் எடுக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -