ஹனுமா விஹாரி, பாபா அப்பராஜித் உட்பட 7 வீரர்கள் தாக்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க போவதாக தகவல்

0
72
Baba Aparajith and Hanuma Vihari

50 ஓவர் கொண்ட தாக்கா பிரீமியர் லீக் தொடர் 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா சூழ்நிலை காரணமாக இந்த தொடர் பாதியில் நின்று போனது. இந்த ஆண்டிற்கான தாக்கா பிரிமியர் லீக் தொடர் நேற்று நடைபெற தொடங்கியுள்ளது.

இந்த தொடரில் மொத்தமாக 11 அணிகள் பங்கேற்கும். ரவுண்ட் ராபின் விதிமுறைப்படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு போட்டியில் மோத வேண்டும். ரவுண்ட் ராபின் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பின்னர் சூப்பர் சிக்ஸ் சுற்றில் களமிறங்கி விளையாடும். இதில் தேர்ச்சி பெறும் அணிகள் அடுத்தடுத்து நாக் அவுட் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி வரை முன்னேறும்.இந்த தொடரில் இதுவரை அதிகபட்சமாக அபஹானி லிமிடெட் அணி மூன்று முறை கோப்பை வென்றுள்ளது.

இந்திய வீரர்கள் பங்கேற்பு :

கடந்த மாதம் நடந்து முடிந்த ஏலத்தில் கைப்பற்றப்படாத இந்திய வீரர்களான ஹனுமா விஹாரி, அபிமன்யு ஈஸ்வரன், பர்வேஸ் ரசூல், பாபா அபராஜித், அசோக் மெனாரியா, சிராக் ஜானி மற்றும் குரீந்தர் சிங் ஆகியோர் தாக்கா பிரீமியர் லீக் தொடரில் இந்த ஆண்டு விளையாடப் போவதாக தற்போது தகவல் வௌியாகியுள்ளது.

இதற்கு முன் இந்திய வீரர்கள் தாக்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடி இருக்கின்றனர். தினேஷ் கார்த்திக் மனோஜ் திவாரி மற்றும் யூசப் பதான் உட்பட பல முன்னணி வீரர்கள் இந்த தொடரில் விளையாடி இருக்கின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு ஹனும விஹரி அபஹானி லிமிடெட் அணிக்கும், அபிமன்யு ஈஸ்வரன் பிரைம் பேங்க் அணிக்கும், ரசூல் ஷேக் ஜமால் தன்மோண்டிக்காகவும், அபராஜித் ரூப்கஞ்ச் டைகர்ஸ் அணிக்காகவும், மெனாரியா கெளகருக்காகவும், ஜானி லெஜண்ட்ஸ் ஆஃப் ரூப்கஞ்சிற்காகவும், குரிந்தர் காசி குரூப் கிரிக்கெட்டர்களுக்காகவும் விளையாட தற்போது தயாராகி விட்டனர்.

இந்த ஆண்டு தாகா பிரீமியர் லீக் தொடரில் அனைத்து அணைகளும் ஒரு ஓவர்சீஸ் வீரரை வைத்து விளையாடிக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் கூட பங்கேற்க போகிறார்.அவர் முகம்மதின் ஸ்போர்டிங் அணிக்காக விளையாட போகிறார். அதேபோல ஜிம்பாப்வே சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரர் சிகந்தர் ராசா ஷினேபுக்கர் அணிக்காக விளையாட போகிறார்.

ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் முறையில் எந்தவித அனுமதிக்காமல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறப் போவதில்லை. எனவே இவர்கள் (மேல் குறிப்பிட்ட வீரர்கள்) அனைவரும் தாக்க பிரீமியர் லீக் தொடரில் விளையாட போகின்றனர். அதேபோல புஜாரா லண்டனில் சஸ்செக்ஸ் அணிக்கு கவுண்டி கிரிக்கெட் விளையாடப் போகிறார் என்பதும் கூடுதல் தகவலாகும்.