7இந்திய வீரர்கள் பந்துவீச்சு முறையில் சந்தேகம்.. 2வீரர்களுக்கு பந்து வீச தடை.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

0
9676
BCCI

இந்தியாவின் உள்நாட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ இருந்து வருகிறது. இது ஒரு தனியார் அமைப்பாக இருந்தாலும், சில நீதிமன்ற அறிவுறுத்தல் மற்றும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் உள்நாட்டில் பந்து வீசும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிலரின் பந்து வீசும் முறையில் குறைபாடுகளை கண்டுள்ளதாகவும், அவர்களின் பந்து வீசும் முறையில் சந்தேகம் இருப்பதாகவும், அந்தக் குறிப்பிட்ட வீரர்களின் மாநில கிரிக்கெட் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.

- Advertisement -

இதன்படி இந்திய அணிக்கு 1 ஒருநாள் போட்டியிலும், இரண்டு டி20 போட்டியிலும் விளையாடி உள்ள சௌராஷ்டிராவை சேர்ந்த 25 வயதான இடது கை இளம் வேத பந்துவீச்சாளர் சேத்தன் சர்க்காரியா பந்துவீச்சு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருப்பதாக பிசிசிஐ கூறியுள்ளது.

இவர் ஆரம்பத்தில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார். கடைசியாக டெல்லி அணிக்காக விளையாடி தற்பொழுது அந்த அணியால் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். மொத்தம் இவர் 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் பந்துவீச்சு குறித்து பிசிசிஐ கூறியுள்ள சந்தேகங்கள் தெளிவாக இல்லை என்று சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் கருதுகிறது. மேலும் இவர் வருகின்ற ரஞ்சித் தொடரில் சௌராஷ்டிரா அணிக்காக பந்து வீச முடியும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் இவருடன் சேர்த்து தனுஷ் கோட்டியன் மும்பை, ரோகன் குன்னும்மாள் கேரளா, சல்மான் நிசார் கேரளா, சௌரப் துபே விதர்பா மற்றும் அர்பித் குலேரியா ஹிமாச்சல் பிரதேசம் என ஆறு வீரர்கள் பந்து வீசும் முறையில் சந்தேகம் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

மேலும் கர்நாடக அணிக்காக விளையாடி வரும் இந்திய அணிக்காக விளையாடி உள்ள மனிஷ் பாண்டே மற்றும் ஸ்ரீஜித் ஆகியோரது பந்து வீசும் முறை விதிகளுக்கு உட்பட்டு இல்லை என்று கூறி பிசிசிஐ தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.