வீடியோ.. 6,4,4,6,4.. 9பந்து 31ரன்.. ரிங்கு சிங் மீண்டும் மாஸ் பினிஷிங்.. ஆஸி அலறல்!

0
26781
Rinku

இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பனிப்பொழிவின் காரணமாக முதலில் பந்து வீச முடிவு செய்தது. ஆடுகளமும் மெதுவாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் களம் இறங்கிய இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் சூழ்நிலையைப் பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்கள்.

ஜெய்ஸ்வால் அதிரடியாக அரை சதம் அடித்து ஆட்டம் இழக்க, அடுத்து வந்த இசான் கிஷனும் அதிரடியாக அரைத்ததம் எடுத்து வெளியேறினார். இந்த நிலையில் துவக்க வீரராக வந்த ருத்ராஜ் 38 பந்துகளில் அரைசதம் எடுத்து அவரும் கடைசி கட்டத்தில் ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக 10 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி இரண்டு ஓவர்கள் இருக்கும் பொழுது வெளியேறினார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் திலக் வர்மா வர வேண்டிய இடத்தில் இரண்டு ஓவர்கள் மட்டும் இருந்ததால் பினிஷர் ரிங்கு சிங் அனுப்பப்பட்டார். முன்கூட்டியே அனுப்பப்பட்டதற்கான காரணத்தை ரிங்கு சிங் பேட்டிங்கில் காட்டினார்.

சீன் அப்பாட் வீசிய ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் ரிங்கு சிங் மூன்று பவுண்டர்கள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 24 ரன்கள் குவித்து அசத்தினார். அந்த ஓவரில் அவர் பந்துகளை எதிர்கொண்ட விதம் அபாரமாக இருந்தது.

மொத்தமாக ஒன்பது பந்துகள் சந்தித்த அவர் நான்கு பவுண்டரி இரண்டு சிக்ஸர் உடன் ஆட்டம் இழக்காமல் 31 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியின் காரணமாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்கள் குவித்தது.

ரிங்கு சிங் இந்திய அணிக்கு நான்கு டி20 போட்டிகளில் 38(21), 37(15), 22(14), 31*(9) என அதிரடியாக ஏறக்குறைய 200 மேல் கடைசி கட்டத்தில் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரிய உதவியாக தொடர்ந்து இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.