6, WD, 6, W, 6, 6, 6 ; ஒரே ஓவரில் பிளே ஆப் சுற்று வாய்ப்பை விட்டு ஹைதராபாத்தை துரத்திய லக்னோ!

0
992
Ipl2023

இன்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் ஹைதராபாத் அணியும் லக்னோ அணியும் மோதிக்கொண்ட போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்று வாய்ப்பில் தொடர்கிறது. அதே சமயத்தில் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறி இருக்கிறது!

இந்தப் போட்டிக்கான டாசை வென்று முதலில் பேட்டிங் செய்ய வந்த ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா 7, அன்மோல்ப்ரீத் சிங் 36, ராகுல் திரிபாதி 20, எய்டன் மார்க்ரம் 28, கிளாசன் 48, பிலிப்ஸ் 0, அப்துல் சமத் 37, புவனேஸ்வர் குமார் 2 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன் சேர்த்தது.

- Advertisement -

பத்து ஓவர்களுக்கு பிறகு லக்னோ மணிக்கு பந்து வீச வந்த அந்த அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா அடுத்தடுத்த பந்துகளில் மார்க்கம் மற்றும் பிலிப்சை வெளியேற்றியது, இந்த ஆட்டத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இவர் நான்கு ஓவர்களில் 24 ரன்களுக்கு இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இலக்கை நோக்கி தொடர்ந்து விளையாடிய லக்னோ அணிக்கு கைல் மேயர்ஸ் 2, குயின்டன் டி காக் 29, ஸ்டாய்னிஸ் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

ஆட்டத்தின் 16ஆவது ஓவரை அபிஷேக் சர்மா வீச, அந்த ஓவரில் மூன்று பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் விளாசி ஸ்டாய்னிஸ் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து களத்திற்கு வந்த நிக்கோலஸ் பூரன் மீதம் இருந்த மூன்று பந்துகளிலும் மூன்று சிக்ஸர்களை தொடர்ந்து விளாசினார். இந்த ஒரே ஓவரில் ஆட்டம் ஒட்டுமொத்தமாக லக்னோ அணியின் பக்கம் வந்து விட்டது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய நிக்கோலஸ் பூரன் 13 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 44 ரன்கள் குவித்து களத்தில் நின்றார். லக்னா அணிக்கு மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த இளம் இந்திய வீரர் ப்ரீராக் மன்கட் 45 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 64 ரன்கள் எடுத்தார்.

முடிவில் லக்னோ அணி 19.2 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 12வது ஆட்டத்தில் 15 புள்ளிகள் உடன் லக்னோ அணி தற்பொழுது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஹைதராபாத் அணி 12 வது ஆட்டத்தில் 7 தோல்விகளைப் பெற்று ஏறக்குறைய பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது!