“2 பந்துக்கு 6 ரன்.. திக் திக் பினிஷ்.. நான் நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு!” – அசலங்கா அசத்தல் பேட்டி!

0
2648
Asalanga

நேற்று 16வது ஆசியக்கோப்பை தொடரில் உச்சகட்ட பரபரப்பான போட்டி இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இறுதிப் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து இலங்கை அணியை வெல்ல வைத்தார் அசலங்கா!

நேற்று டாஸ் வென்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார். ஐந்து விக்கெட்டுகள் இழந்து பாகிஸ்தான் 130 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

- Advertisement -

இந்த இடத்தில் இருந்து பாகிஸ்தான் அணியை 42 ஓவர்களுக்கு 252 ரன்கள் என்று, முகமது ரிஸ்வான் மிகச் சிறப்பான நிலைக்கு கொண்டு சென்று வைத்தார். ஏறக்குறைய மொத்த ஆட்டத்தையும் பாகிஸ்தான் கையில் எடுத்தது என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் இலங்கை பேட்டிங் செய்ய வந்து இலக்கை துரத்திய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. அவர்கள் பேட்ஸ்மேன்களிடம் ஒரு தெளிவும் தைரியமும் இருந்தது. அவர்கள் ரன்கள் எடுத்தார்கள், ஆனால் அதை ஆபத்து இல்லாத முறையில் கொண்டு வந்தார்கள். இதனால் பாகிஸ்தானுக்கு விக்கெட்டே கிடைக்கவில்லை.

இந்த நிலையில்தான் குசால் மெண்டிஸ் ஆட்டம் இழந்ததும், எளிதில் வென்று இருக்க வேண்டிய போட்டியை, அனுபவ வீரர்கள் கேப்டன் சனகா மற்றும் தனஞ்செயா இருவரும் மோசமாக விளையாடி ஆட்டம் இழந்து கடினமாக மாற்றினார்கள்.

- Advertisement -

அந்த இடத்தில் கடைசி ஓவருக்கு எட்டு ரன்கள் தேவைப்பட, அங்கிருந்து கடைசி இரண்டு பந்துகளுக்கு ஆறு ரன்கள் என்று மாறியது. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் பவுண்டரி மற்றும் ஆறாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து, மிகப்பெரிய அழுத்தத்தில் அசலங்கா அணியை வெல்ல வைத்தார். அவர் 47 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.

இதற்கடுத்து போட்டி முடிந்த பிறகு பேசிய அவர் ” பெரிய மைதானம் என்பதால் கேப்பில் அடித்து இரண்டு ரன்கள் ஓடுவது எப்படி என்பது குறித்து நான் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் மதிஷாவை மிகவும் கடினமாக ஓடச் சொன்னேன். எப்படியும் இரண்டு ரன்கள் எடுக்கவே முயற்சி செய்யலாம் என்று சொன்னேன்.

அப்போது என் மனதில் இரண்டு விஷயங்கள் இருந்தது. ஒன்று அவர் பவுன்சர் வீசுவார் இல்லை யார்க்கர் வீசுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் நேராக மெதுவான பந்தை வீசினார். அது எனக்கு மிகவும் வசதியாகிப் போனது.

நான் இது குறித்து இப்பொழுதும் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். குசலும் சதிராவும் நன்றாக விளையாடி நல்ல வலிமையான அடிப்படையை உருவாக்கினார்கள். நான் விளையாட்டை முடித்துக் கொடுக்க இருந்தேன். அணியில் என்னுடைய ரோலும் அதுதான். என்னுடைய கேரியரில் இது இரண்டாவது சிறந்த இன்னிங்ஸ் ஆக அமையும்!” என்று கூறி இருக்கிறார்!