கிரிக்கெட்டில் 10ஆம் நம்பர் ஜெர்சி அணிந்து விளையாடிய 6 வீரர்கள்

0
1019
Shardul Thakur and Sachin Tendulkar

இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட வேண்டும் என்கிற ஆசையில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி, பின்னாளில் தேசிய அளவில் தனது நாட்டிற்காக விளையாட வேண்டும் என்கிற கனவோடு ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தங்கள் இளம் வயதில் நிச்சயமாக இருந்திருப்பார்கள். ஆனால் அந்த கனவு அவ்வளவு எளிதில் நிறைவேறி விடாது. ஒவ்வொரு நாளும் அதற்கான முயற்சியும் உழைப்பும் போட வேண்டிவரும்.அத்தனை கடின உழைப்பிற்குப் பின்னர் ஒரு நாளில் தன் சொந்த நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பு நல்ல வந்தடையும்.

முதல்முறையாக தனது சொந்தநாட்டு ஜெர்சியை அணிந்து தனது சொந்த நாட்டிற்காக களமிறங்கி விளையாடும் அந்த மெய்சிலிர்க்கும் தருணத்தை அவ்வளவு எளிதில் எந்த ஒரு கிரிக்கெட் வீரராலும் மறந்துவிட முடியாது. ஆரம்பத்தில் ஜெர்சி அணிந்து விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஒரு நம்பர் கொடுக்கப்படும்.

அந்த குறிப்பிட்ட நம்பரை கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடும் வீரர் பின்னாளில் எத்தகைய இடத்தில் வளர்ந்து நிற்கிறாரோ, அதே அளவுக்கு அவருடைய ஜெர்சி நம்பர் பின்னாளில் அதிக அளவில் பேசப்படும். உதாரணத்திற்கு 10 என்று சொன்னால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். கிரிக்கெட்டில் நம்பர் 10 கொண்ட ஜெர்சியை சச்சின் டெண்டுல்கர் உட்பட மொத்தம் 6 வீரர்கள் அணிந்து விளையாடி இருக்கின்றனர். அவர்கள் யார் என்று தற்பொழுது பார்ப்போம்.

சச்சின் டெண்டுல்கர்

மேலே சொன்னதுபோல கிரிக்கெட் மட்டுமல்லாமல் பொதுவாக பத்து என்று சொன்னால் அனைவருக்கும் நிச்சயமாக இவருடைய முகம் நிச்சயமாக நினைவுக்கு வரும். சாதாரண ஒரு இளைஞனாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கி, அந்த கிரிக்கெட் விளையாடிய தன்னுடைய ஆளுமையால் இன்றுவரை கட்டி ஆண்டு வருகிறார். சர்வதேச அளவில் இவர் எடுத்த ரன்கள் 34,357. சர்வதேச அளவில் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை இன்றுவரை சச்சின் தன் கைவசம் வைத்திருக்கிறார். இந்த சாதனையை முறியடிக்க இன்னும் சில ஆண்டுகாலம் நிச்சயமாக தேவைப்படும்.

சச்சின் டெண்டுல்கர் 33 மற்றும் 9 நம்பரை கொண்ட ஜெர்சிக்களையும் அவர் அணிந்து விளையாடி இருக்கிறார். ஆனால் அவருடைய இருபத்தி நான்கு வருட கிரிக்கெட் கேரியரில் நம்பர் 10ஐ உடைய ஜெர்சி இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு அனைவரது மனதிலும் ஊறிப்போன ஒரு நம்பரை கொண்ட ஜெர்சியாக திகழ்கிறது. அதன் காரணமாகவே பிசிசிஐ சச்சின் டெண்டுல்கரை போற்றும் வகையில், நம்பர் 10ஐ உடைய ஜெர்சிக்கு அதிகாரபூர்வமாக ஓய்வறிவித்து விட்டது.

ஷாகித் அப்ரிடி

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆடுபவர் கிரிக்கெட் வீரரான இவர் தலைசிறந்த வீரர்கள் மத்தியில் ஒருவராவார். பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகள் 198 ஒருநாள் போட்டிகள் மற்றும்,99 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் சர்வதேச அளவில் பேட்டிங்கில் 11,196 ரன்களையும், பவுலிங்கில் 543 விக்கெட்டுகளையும் இதுவரை கைப்பற்றியிருக்கிறார்.

இவரும் நம்பர் 10ஐ உடைய ஜெர்சி அணிந்து பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச அளவில் தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் விளையாடினார். 2017ம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இவர் அறிவித்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நம்பர் 10ஐ உடைய ஜெர்சிக்கு அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவித்தது.

பீட்டர் சிடில்

ஆஸ்திரேலியா உட்கார விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அனைவராலும் கவர்ந்து ஈர்க்கப்பட்டவர் பீட்டர் சிடில். ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச அளவில் 67 டெஸ்ட் போட்டிகள் 20 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் இவர் விளையாடி இருக்கிறார். தன்னுடைய முதல் போட்டியில் இருந்து கடைசி போட்டி வரை நம்பர் 10ஐ உடைய ஜெர்சியை இவர் அணிந்து விளையாடினார். 221 டெஸ்ட் விக்கெட்டுகள், 17 ஒருநாள் விக்கெட்டுகள் மற்றும் 3 டி20 விக்கெட்டுகளை இவர் தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் கைப்பற்றினார். 2008 ஆம் ஆண்டு விளையாடத் தொடங்கிய பீட்டர் சிடில் 2019ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

டேவிட் மில்லர்

கில்லர் மில்லர் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் அதிரடி ஆட்டக்காரர் தான் இந்த டேவிட் மில்லர். தென்ஆப்பிரிக்கா அணிக்காக சர்வதேச அளவில் 134 ஒருநாள் போட்டிகள் மற்றும் 81 டி20 போட்டிகளில் இவர் விளையாடி இருக்கிறார். தென்னாப்பிரிக்கா அணிக்காக அனைத்து வகை சர்வதேசப் போட்டிகளிலும் இவர் நம்பர் 10ஐ உடைய ஜெர்சியை அணிந்து விளையாடினார்.

சர்வதேச அளவில் தென் ஆப்பிரிக்க அணி காக மட்டும் இந்த நம்பர் உடைய ஜெர்சியை அணிந்து விளையாடாமல் ஐபிஎல் தொடரிலும் இதே நம்பரை உடைய ஜெர்சியை அணிந்து இவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது. 2013 முதல் 2019ஆம் ஆண்டு வரை பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆலன் டொனால்ட்

சர்வதேச அளவில் மிக சிறப்பாக விளையாடிய வேகப் பந்துவீச்சாளர்கள் மத்தியில் ஒரு முக்கிய வீரராக பார்க்கப்படுபவர் தான் இந்த ஆலன் டொனால்ட். தென்னாப்பிரிக்க அணிக்காக இவர் தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் மொத்தமாக 72 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். தென்னாப்பிரிக்கா அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக 300 விக்கெட்டுகளை ஆலன் டொனால்ட் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி தென்ஆப்பிரிக்கா அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இன்றும் நான்காவது இடத்தில் அவரது பெயர் நிலைத்து நிற்கிறது. இவரும் தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் நம்பர் 10ஐ உடைய ஜெர்சியை அணிந்து விளையாடினார். இவருக்குப் பின் டேவிட் மில்லர் மட்டுமே நம்பர் 10ஐ உடைய ஜெர்சியை அணிந்து விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.

ஷர்துல் தாகூர்

இந்திய வீரர்கள் மத்தியில் சச்சின் டெண்டுல்கருக்கு பின்னர் நம்பர் 10 உடைய ஜெர்சியை அணிந்து விளையாடிய ஒரே கிரிக்கெட் வீரர் இவர் மட்டும்தான். 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் இவர் நம்பர் 10ஐ உடைய ஜெர்சி அணிந்து விளையாடினார்

சச்சின் டெண்டுல்கர் அணிந்து விளையாடிய அந்த நம்பரை உடைய ஜெர்சியை இவர் அணிந்து விளையாடியதும், சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை கிளம்பியது. அதன் பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிசிசி அதிகாரப்பூர்வமாக நம்பர் 10ஐ உடைய ஜெர்சிக்கு ஓய்வு அறிவித்து விட்டது.

தாகூரும் தான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை என்றும், தன்னுடைய பிறந்த தேதியை கூட்டினால் பத்து வரும். எனவே தான் அந்த நம்பரை தேர்வு செய்ததாக கூறினார். பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது அவர் 54 நம்பரை கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.