கூடிய விரைவில் நடக்க இருக்கும் உலக கோப்பை டி20 தொடரில், மற்ற நாட்டு அணிக்கு விளையாடப் போகும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்கள்

0
1289
Ravi Rampaul and Ish Sodhi

இந்த ஆண்டு உலக கோப்பை டி20 தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிசிசிஐ தரப்பில் உலக கோப்பை டி20 தொடர் இந்தியாவில் நடைபெறப் போவதில்லை என்றும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நகரங்களில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற போகிறது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது.

மொத்தமாக 16 நாடுகள் பங்கேற்று விளையாட போகும் இந்த உலகக் கோப்பை டி20 தொடர் அக்டோபர் 17 தொடங்கி நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் என எட்டு அணிகள் உலகக் கோப்பை டி20 தொடர் லீக் சுற்றில் விளையாட தகுதி பெற்றுவிட்டது.

ஸ்ரீலங்கா, வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கானா, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய 8 அணிகள் தகுதி சுற்று சுற்றில் விளையாட வைக்கப்படுவார்கள். இதிலிருந்து 4 அணிகள் இறுதியில் தேர்வாகி, மொத்தமாக 12 அணிகள் உலகக் கோப்பை டி20 தொடர் லீக் சுற்றில் களம் இறங்கி விளையாடுவார்கள்.

ஒவ்வொரு அணி வாரியமும் தங்களது அணி வீரர்களின் பெயர் பட்டியலை சில நாட்களுக்கு முன்னர் அடுத்தடுத்து வெளியிட்டனர். இந்தியாவில் பிறந்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் வேறு அணிக்கு இந்த உலகக் கோப்பை டி20 தொடரில் விளையாடி இருக்கின்றனர்.அந்த கிரிக்கெட் வீரர்கள் யாரென பார்ப்போம்.

ரவி ராம்பால்

இவர் இந்தியாவில் பிறக்க வில்லை என்றாலும் இவரது பெற்றோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக விளையாடி வரும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக இதுவரை 23 டி20 போட்டிகளில் விளையாடி இருபத்தி ஒன்பது விக்கெட்டுகளை கைபற்றி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நடந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் மிக அற்புதமாக விளையாட இவரது ஆட்டம் தேர்வுக்குழுவுக்கு நம்பிக்கையை வர வைத்துள்ளது. அதன் காரணமாக மீண்டும் டி20 அணியின் இவரது பெயர் உலக கோப்பை டி20 தொடரை முன்னிட்டு இடம்பெற்றுள்ளது.

இஷ் சோதி

நியூசிலாந்து வலதுகை லெக் ஸ்பின் பந்து வீச்சாளரான இவர் இந்தியாவில் பிறந்தவர் ஆவார். இந்தியாவில் பிறந்த இவர் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக தற்பொழுது விளையாடி வருகிறார். நியூசிலாந்து அணிக்காக இதுவரை 57 டி20 போட்டிகளில் விளையாடி எழுபத்தி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். கடந்த முறை நடந்த உலக கோப்பை டி20 தொடரில் கூட இவர் இந்திய அணிக்கு எதிராக மிக அற்புதமாக பந்துவீசிய அசத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது உள்ள நியூசிலாந்து அணிகள் மிக சிறப்பாக பந்து வீசி வரும் ஸ்பின் பந்து வீச்சாளர்களில் இவர் மிக முக்கியமானவர். கடந்த முறை தேர்வானது போல் இந்த முறையும் உலக கோப்பை டி20 தொடரில் நியூசிலாந்து அணிக்கு விளையாட இவர் தற்பொழுது தேர்வாகியுள்ளார்.

சிமி சிங்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான இவர் பஞ்சாபில் பிறந்தவர். தற்பொழுது இவர் அயர்லாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். அயர்லாந்து கிரிக்கெட் அணிக்காக இதுவரை 31 டி20 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டிகளில் கூட மிக சிறப்பாக சிமி சிங் செயல்பட்டார்.

நல்ல பார்மில் இருக்கும் இவரை அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் இவரை தேர்ந்தெடுத்துள்ளது.

ஜடிந்தேர் சிங்

இந்தியாவில் பிறந்த இவர் தற்பொழுது ஓமன் அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலது கை பேட்ஸ்மேனான இவர் இதுவரை ஓமன் அணிக்காக 15 ஒருநாள் போட்டிகளிலும் 28 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

வலது கை பேட்ஸ்மேனான இவர் ஆஃப் பிரேக் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். சமீப நாட்களில் ஓமன் அணிக்காக சிறப்பாக விளையாடி வருவது அடிப்படையில் இவரை நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் விளையாட ஓமன் கிரிக்கெட் வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது.

சந்தீப் கவுட்

ஹைதராபாத்தில் பிறந்த இவர் தற்போது ஓமன் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். வலது கை பேட்ஸ்மேனான இவர் மீடியம் வேகத்தில் பந்து வீச்சிலும் அசத்துவார். தற்பொழுது உள்ள ஓமன் அணியில் ஆல் ரவுண்டர் வீரர்கள் மத்தியில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 239 ரன்களும், 15 டி20 போட்டிகளில் விளையாடி 89 ரன்கள் குவித்துள்ளார். திட்டமிட்டு போட்டிகளில் இவர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நல்ல ஆல்ரவுண்டர் வீரராக செயல்பட்டும் வரும் இவரை நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் ஓமன் அணியில் விளையாட, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது.

சூரஜ் குமார்

பஞ்சாபில் பிறந்து ஜடிந்தேர் சிங் மற்றும் சந்தீப் கவுட் போல இவரும் உமன் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆனால் இவர் இதுவரை ஓமன் கிரிக்கெட் அணிக்காக 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 245 ரன்களும், 16 டி20 போட்டிகளில் விளையாடி 105 ரன்கள் குவித்துள்ளார்.

ஜடிந்தேர் சிங் மற்றும் சந்தீப் கவுட் போல இவரையும் நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் ஓமன் கிரிக்கெட் வாரியம் வீரர்கள் பட்டியலில் இணைத்துள்ளது. தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஓமன் அணி இறுதியில் தேர்வாகி குரூப் இரண்டில் இடம் பெற்று லீக் சுற்றுக்கு முன்னேறினால், லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக இந்தியாவைச் சேர்ந்த இவர்கள் களம் இறங்கி விளையாடும் காட்சியை நாம் அனைவரும் பார்க்கலாம்.