6 அடி 9 அங்குலம்.. பயிற்சியில் பாகிஸ்தானை ஆச்சரியப்படுத்திய இந்திய U-19 பவுலர்.. ஐபிஎல் வாய்ப்பும் கிடைத்தது!

0
15871

தற்பொழுது நடக்க இருக்கும் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கிறது என்கின்ற காரணத்தினால் சிலவிதமான எதிர்பார்ப்புகள் ரசிகர்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது!

காரணம், பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு இறுதியாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக வந்தது. இதற்கு அடுத்து பாகிஸ்தான் இந்தியா வந்தது கிடையாது.

- Advertisement -

மேலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் கடந்த ஒரு தசாப்தமாக நேரடியான இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது கிடையாது. அரசியல் காரணங்களால் விளையாட்டு உறவு பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் பலம் வாய்ந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணியை ஆசியக் கோப்பையில் படுதோல்வி அடைய வைத்து இந்திய அணி புதிய எழுச்சி பெற்று இருக்கிறது.

மேலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரின் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

இப்படியான காரணங்களால் இந்த உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியின் காரணமாக, ஒட்டுமொத்தமாக இந்த உலகக் கோப்பை தொடருக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

விசா குறித்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து பாகிஸ்தான அணி தற்பொழுது ஹைதராபாத்துக்கு வந்து தங்களுடைய முதல் பயிற்சி அமர்வை முடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த பயிற்சி அமர்வில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய வீரரான நிஷாந்த் சரனு என்கின்ற வேகப்பந்துவீச்சாளர் பாகிஸ்தான் அணியின் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்.

அவர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் கடைசியில் வரக்கூடியவர்களுக்கும் மேலும் பகர் ஜமானுக்கும் பந்து வீசினார். 6 அடி 9 அங்குலம் உயரத்தின் காரணமாக, ஃபாதர் ஜமாலுக்கு பவுன்சர் வீசி ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அவரது வேகம் குறைவாகத்தான் இருக்கிறது.

மேலும் தற்போது பாகிஸ்தான் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மோர்னே மோர்கல் ஐபிஎல் தொடரில் லக்னோ ஜெயின்ட்ஸ் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார். இதனால் அவர் வருகின்ற ஐபிஎல் சீசனுக்கு லக்னோ அணியின் வலை பயிற்சி பந்துவீச்சாளராக வர நிஷாந்தை கேட்டிருக்கிறார். மேலும் நிஷாந்த் இந்த வருடத்தில் இந்தியா வந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக வலையில் பந்து வீசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக பந்து வீசியது குறித்து பேசி உள்ள நிஷாந்த் கூறும் பொழுது “நான் தற்போது மணிக்கு 125 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறேன். மோர்கல் சார் என்னுடைய பந்துவீச்சு வேகத்தை அதிகரிக்க சொல்லி கேட்டு இருக்கிறார். மேலும் லக்னோ ஜெயின்ஸ் அணிக்கு வலையில் பந்து வீச முடியுமா? என்றும் அவர் கேட்டு இருக்கிறார். என்னுடைய முதல் நோக்கம் வெள்ளைப்பந்து மற்றும் சிவப்பு பந்தில் ஹைதராபாத் மாநில அணிக்காக விளையாட வேண்டும்!” என்பதே என்று கூறி இருக்கிறார்!