சி.எஸ்.கே அணியில் இடம் கிடைத்தும் ஒரு போட்டியில் கூட விளையாடாத 6 பிரபல வீரர்கள்

0
91308
Baba Aparajith and Irfan Pathan
Photo source: Twitter

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் வரலாற்றில் சிறப்பான அணி என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.2008ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை விளையாடிய அனைத்துச் சீசன்களிலும் பிளேஆப் சுற்றுக்குத் தகுதிப் பெற்ற ஒரே அணி என்ற பெருமைக்குரியது.ஆனால் 2020ஆம் ஆண்டு அச்சாதனை தகர்த்தப்பட்டது.சி.எஸ்.கே அணியின் வெற்றிக்குக் கேப்டன் தோனியின் பங்களிப்பே அதிகம்.சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 2007 டி20 உலகக் கோப்பை,2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை வென்ற இந்த ராஞ்சி வீரர் சி.எஸ்.கே அணி மூன்று முறை கோப்பையை வெல்லவும் உதவி உள்ளார்.

சி.எஸ்.கே அணியின் இவ்விதப் பெருமைக்கு,கேப்டன் தோனியின் வெற்றி மந்திரமே காரணமாகும்.சென்னை ரசிகர்களால் ‘தல’ என்று செல்லமாகப் அழைக்கப்படும் தோனி,அணியில் அதிகமான மாற்றத்தை ஏற்படுத்த மாட்டார்.போட்டியின் தன்மைக்கேற்ப எப்பொழுதும் 12 முதல் 15 வீரர்களை மட்டுமே மாற்றி மாற்றி பயன்படுத்துவார்.காயம் அடையும் வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களும் அணியில் இடம் பெற்று இருப்பர்.

- Advertisement -

சி.எஸ்.கே அணியில் இடம் கிடைத்தும்,ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் சீசன் முழுவதும் பெஞ்சிலேயே உட்கார்ந்த வீரர்கள் பலரும் உள்ளனர்.அதில் திறமை இருந்தும் பிளேயிங் 11இல் வாய்ப்புக் கிடைக்காத 6 வீரர்களைப் பற்றிப் பார்ப்போம்.

6. கைல் அப்பாட்:

தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் கைல் அப்பாட் தனது துல்லியமான பந்துவீச்சால் அணியில் தன் பெயரைப் பதித்தார்.சர்வதேச அனிக்காக டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசிய இவர்,ஐ.பி.எலில் சி.எஸ்.கே அணியின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தார்.2015ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸால் ஏலத்தில் இருந்து எடுகப்பாட்டார்.

- Advertisement -

ஆனால் ஒரு போட்டியில் கூட இவர் களம் இறங்கவில்லை.2015ஆம் வருடம் சி.எஸ்.கே அணியில் ஸ்மித்,மெக்கல்லம்,டூ பிளசிஸ் மற்றும் பிராவோ என நான்கு வெளிநாட்டு வீரர்கள் அணியில் இடம் பெற்று இருந்தனர்.அதனால் அப்பாட்டுக்கு பிளேயிங் 11இல் வாய்ப்புக் கிடைக்கவில்லை.பின்பு,2016ஆம் ஆண்டு பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் இருந்து எடுத்தது.

5. அகிலா தனஞ்சயா:

இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்சயா,2018ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பங்களித்தார்.டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக 2018ஆம் ஆண்டு ஐ.பி.எலில் முதல் முறையாக களம் இறங்கினார்.ஆனால் 2013ஆம் ஆண்டே ஏலத்தில் இருந்து சி.எஸ்.கே அணியால் தேர்ந்து எடுகப்பட்டார்.

தகுந்த வாய்ப்புக் கிடைத்து இருந்தால்,சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான சேப்பாக்கத்தில் அகிலா தனஞ்சயா தனது திறமையை நிரூபித்து இருப்பார்.அஸ்வின் – ஜடேஜா கூட்டணி தொடர்ந்து அற்புதமாக செயல்பட்டதால்,கேப்டன் தோனி தனஞ்சயாவிற்கு வாய்ப்புக் கொடுப்பதைப் பற்றி எண்ணவில்லை.

4. மேட் ஹென்ரி:

நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த மேட் ஹென்ரி 2014ஆம் ஆண்டு சி.எஸ்.கே அணியால் தேர்ந்து எடுக்கப்பட்டார்.கைல் அப்பாட்டைப் போல இவருக்கும் தண்ணீர்ச் சுமக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இவரின் அருமை தெரியவில்லை.

ஐசிசி உலகக் கோப்பை 2019 ஆம் ஆண்டு இந்திய அணி அரை – இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் வீழ்ந்தது.இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியதற்கு இவரும் ஒரு முக்கியப் புள்ளியாகத் திகழ்ந்தார்.

3. ஆண்ட்ரூ டை:

2018இல் பஞ்சாப் அணிக்காக பங்கேற்ற ஆண்ட்ரூ டை அவ்வாண்டு அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார்.2017ஆம் ஆண்டும் குஜராத் அணிக்காகவும் சிறப்பாகப் பங்களித்து உள்ளார்.

பிக் பேஷ் லீகில் அற்புதமாகப் பந்துவீசியதால்,ஏலத்தில் இருந்து முதல் முறையாகச் சென்னை அணி இவரைத் தேர்ந்து எடுத்தது.ஐ.பி.எல் தொடர் தொடங்கும் முன்பே இவர் காயம் அடைந்ததால் அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

2. இர்பான் பதான்:

இந்தப் பட்டியலில் இருக்கும் மிகப் பெரிய வீரர் முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதான்.இவர் 2015ஆம் ஆண்டு சி.எஸ்.கே அணியில் இடம்பெற்று இருந்தார்.முதல் இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக இவர் களமிறங்கவில்லை.காயம் குணமடைந்த பின்பும் இவருக்கு அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை.இவர் இல்லாமலேயே அந்த வருடம் சி.எஸ்.கே அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றது.

2017ஆம் ஆண்டு புனே அனிக்காகவும் 2018ஆம் ஆண்டு குஜராத் அணிக்காகவும் இவர் விளையாடினார்.இவர் சமீபத்தில் சாலைப் பாதுகாப்புத் தொடரில் பங்கேற்றார்.அந்தத் தொடரில் அணியின் வெற்றிக்காக அனைவரும் மெய்சிலிர்க்கும் வகையில் சிறப்பாக விளையாடி தனது முழு திறனையும் வெளிப்படுத்தினார்.

1. பாபா அப்பராஜித்:

U-19இல் அருமையாக விளையாடியதால் பாபா அப்பராஜித் ஐ.பி.எலில் சென்னை அணியில் இடம் பிடித்தார்.சூப்பர் கிங்ஸ் அணியில் அவரை விட அனுபவம் மிகுந்த வீரர்கள் இடம்பிடித்த காரணத்தால் இவர் ஒரு போட்டியில் கூட களம் இறங்கவில்லை.இருப்பினும் ஒரு போட்டியிலாவது இவரதுத் திறமையைச் சோதிக்கும் வகையில் ஒரு வாய்ப்புக் கொடுத்து இருக்கலாம் என்பது தான் தமிழக மக்களின் ஏக்கம்.

2016ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டது.அந்த ஆண்டும் இவர் தோனி தலைமையில் அமைந்த புனே அணிக்காக தேர்வுச் செய்யப்பட்டார்.ஆனால்,அந்த அணியில் கூடத் தன் திறமையை நிரூபிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.இவரது கிரிக்கெட் பயணம் நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.