6 பந்துகளில் தொடர்ந்து 6 சிக்சர்கள்; ஆண்ட்ரு ரசல் அசத்தல் – வீடியோ இணைப்பு!

0
342
Russell

கிரிக்கெட் நவீனம் அடைந்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒருநாள் போட்டிகள் எனது பரிணாமம் பெற்று, தற்போது 20 ஓவர்கள் தினமும் 10 ஓவர்களில் எனவும் சுருங்கி குறைந்த நேரத்தில் மிக பரபரப்பான ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவும் மிகப்பெரிய வணிக காரணியாகவும் மாறிவருகிறது!

இந்தியாவில் 20 ஓவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிக பிரபல்யம் அடைந்ததை தொடர்ந்து கிரிக்கெட் நாடுகளில் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் இங்கிலாந்தில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சுருக்கப்பட்டு 100 பந்து போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இது இன்னும் சுருக்கப்பட்டு வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சிக்ஸ்டி என்று பத்து ஓவர் போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

நேற்று டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி செயின்ட் கிட்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் உலகின் அபாயகரமான ஆல்ரவுண்டர் ஆன ஆண்ட்ரு ரசல் தொடர்ந்து 6 சிக்சர்கள் விளாசி அட்டகாசப்படுத்தி இருக்கிறார். டோமனிக் டிராக்ஸ் வீசிய ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர்களை விளாசியவர் அடுத்து சுழற்பந்துவீச்சாளர் ஜான் ரஸ் ஜாகேஷர் வீசிய ஓவரில் அடுத்து 2 சிக்ஸர்கள் என 6 சிக்சர்களை தொடர்ந்து விளாசினார். இந்தப் போட்டியில் ஒரு ஓவர் முடித்தால் பேட்ஸ்மேன் மாற வேண்டிய அவசியம் கிடையாது. இதனால் தொடர்ந்து 6 சிக்சர்களை அவரால் விளாச முடிந்தது.

முதலில் விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி ஆண்ட்ரூ ரசல் 4 பவுண்டரி 6 சிக்சர்கள் என 24 பந்துகளில் 72 ரன்கள் குவிக்க 10 ஓவர்கள் முடிவில் 155 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய செயின்ட் கிட்ஸ் அணி 15 பந்தில் ரூதர்போர்டு அரைசதம் அடிக்க 10 ஓவர்கள் முடிவில் 152 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆண்ட்ரூ ரசலின் அதிரடி ஆட்டத்திற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!