6 பந்து 8 ரன்.. 39 வருட வரலாறு.. பாகிஸ்தான் பரிதாபம்.. இந்தியா இலங்கை ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும்!

0
10060
Pakistan

நடப்பு ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், அரைஇறுதி போலான போட்டியில், இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம் முதலில் 45 ஓவர்கள் என்றும், மீண்டும் மழையால் பாதிக்கப்பட 42 ஓவர்கள் என்றும் நடத்தப்பட்டது.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தார். பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் பகார் ஜமான் 4, கேப்டன் பாபர் அசாம் 29, முகமது ஹாரிஸ் 3, முகமது நவாஸ் 12 என வரிசையாக வெளியேறினார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 130 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இந்த நேரத்தில் மழை குறுக்கீடு வர, உள்ளே சென்று திரும்பி பாகிஸ்தான் அணிக்கு, முகமது ரிஸ்வான் மற்றும் இப்திகார் அகமது இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் கொண்டு வந்தார்கள்.

இந்த ஜோடி தாக்குதல் ஆட்டம் ஆடி 108 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அதிரடியாக அமைத்தார்கள். இப்திகார் அகமது 40 பந்தில் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சதாப் கான் 3 ரன்னில் வெளியேறினார். ஒருமுனையில் நின்ற முகமது ரிஸ்வான் 73 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு, 252 ரன்கள் எடுத்தது.

அடுத்து டக்வொர்த் லிவீஸ் விதிப்படி, இலங்கை அணிக்கு 42 ஓவர்களில் இலக்காக 252 ரன்கள் கொடுக்கப்பட்டது. இந்த முறை துவக்க வீரராக வந்த குசால் பெரேரா 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து குசால் மெண்டிஸ் மற்றும் சதீரா சமரவிக்ரமா சேர்ந்து, இலக்கை நோக்கி மிக அற்புதமாக விளையாடி இன்னிங்சை நகரத்தினார்கள். மிகச் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோர் 177 ரன்களாக இருந்தபொழுது பிரிந்தது. சதீரா 48 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து மிகச்சிறப்பாக விளையாடி வந்த குசால் மெண்டிஸ் 87 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்தச் சமயத்தில் இலங்கை மிக எளிதாக வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்தது. ஆனால் கேப்டன் சனகா 2, தனஞ்செய டி சில்வா 5,
வெல்லாலகே 0 என அடுத்தடுத்து வெளியேற, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்த நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தது. கடைசி ஓவரை ஜமான் கான் வீசினார். அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் இரண்டு ரன்கள் கிடைத்தது. நான்காவது பந்தில் மதுசன் ரன் அவுட் ஆனார்.

எனவே கடைசி இரண்டு பந்துகளில் ஆறு ரன்கள் தேவைப்பட்டது. பேட்டிங் முனையில் சரித் அசலங்கா இருந்தார். அவர் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை அடிக்கப் போக, அது எட்ஜ் எடுத்து ஸ்லிப் பகுதியில் பவுண்டரி போனது. இதற்கு அடுத்து கடைசிப் பந்தில் இரண்டு ரன் தேவைப்பட்டது. அந்தப் பந்தில் அசலங்கா தட்டி விட்டு இரண்டு ரன்கள் எடுக்க, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. சரித் அசலங்கா 47 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்!

இந்த வெற்றியின் மூலம் 11-வது முறையாக ஆசியக்கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிக்கு இலங்கை முன்னேறி இருக்கிறது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவை சந்திக்கிறது. மேலும் ஆசியக் கோப்பை துவங்கப்பட்டு தற்பொழுது வரை 39 ஆண்டுகளில், இதுவரை இந்தியா பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டதில்லை. அந்த வினோதமான வரலாறு தற்பொழுதும் தொடர்கிறது!