5வது டெஸ்ட்.. தரம்சலாவில் உடைய வாய்ப்பிருக்கிற 4 மெகா லெஜன்ட் சாதனைகள்.. இந்திய தரப்பில் 3 ரெக்கார்டுகள்

0
243
Jaiswal

இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணத்தின் இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தரம்சாலா மைதானத்தில் துவங்கும் கடைசிப் போட்டியுடன் முடிவுக்கு வருகிறது.

இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டியையும் இங்கிலாந்து அணி ஒரு போட்டியையும் வென்று இருக்கின்றன. இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலமாக தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

- Advertisement -

நாளை தரம்சாலாவில் துவங்கும் கடைசி போட்டி தொடரில் முடிவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும் கூட, இரு அணிகளுமே வென்றாக வேண்டிய முனைப்பில் விளையாடுவதற்கு முக்கிய காரணங்கள் பல இருக்கின்றன.

இதில் தனிப்பட்ட வீரர்களின் சாதனைகள் சில அடங்கி இருக்கின்றன, மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடந்து வருகின்ற காரணத்தினால் எல்லா போட்டிகளுமே முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக மாறி இருக்கின்றது. இதன் காரணமாக நாளைய போட்டி சம்பிரதாய முறையில் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மூன்று லெஜெண்ட் சாதனைகள் மூன்று வீரர்களால் முறியடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அந்த சாதனைகள் குறித்து பார்ப்போம்.

ஜெய்ஸ்வால் :

- Advertisement -

2016 ஆம் ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி இரண்டு இரட்டை சதங்கள் மற்றும் ஒரு சதத்தின் மூலம் 655 ரன்கள் குவித்தார். உள்நாட்டில் இந்திய வீரர்ஒரு டெஸ்ட் தொடரில் அடித்த அதிகபட்ச ரண்களாக இது பதிவாகி இருக்கிறது. தற்போது 655 ரன்கள் எடுத்திருக்கும் ஜெய்ஸ்வால் மேற்கொண்டு ஒரு ரன் எடுத்தால் இந்த சாதனையை முறியடிப்பார்.

மேலும் 1970-71ஆம் ஆண்டு நான்கு போட்டிகள் கொண்ட வெஸ்ட் இண்டிஸ் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் சுனில் கவாஸ்கர் ஒட்டுமொத்தமாக அந்தத் தொடரில் 774 ரன்கள் குறித்து இருந்தார். ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய பேட்ஸ்மேனால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இது இருந்து வருகிறது. இன்னும் 120 ரன்கள் எடுப்பதன் மூலம் ஜெய்ஸ்வால் இந்த பல ஆண்டுகால சாதனையை முறியடிக்கலாம்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் :

தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 186 போட்டிகளில் 698 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேற்கொண்டு நாளைய போட்டியில் இரண்டு விக்கெட் எடுக்கும் பட்சத்தில், 700 ஆவது சர்வதேச டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றிய முதல் சர்வதேச பந்துவீச்சாளர் என்கின்ற அரிய சாதனையை படைப்பார். ஷேன் வார்னே 708 விக்கெட் எடுத்து முரளிதரனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தரம்சாலா மைதானம் இவருக்கு ஒத்துழைத்தால், இந்தச் சாதனையையும் உடைக்கலாம்.

இதையும் படிங்க : 5வது டெஸ்ட்.. பிளேயிங் லெவனை வெளியிட்ட இங்கிலாந்து.. புது சாதனைக்கு திட்டம்.. முக்கிய மாற்றம்

ரவிச்சந்திரன் அஸ்வின் :

தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் கடந்து இருக்கிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வின்னிங்சில் 35 முறை 5 விக்கெட் கைப்பற்றி அனில் கும்ப்ளே சாதனையைச் சமன் செய்திருக்கிறார். நாளை துவங்கும் போட்டியில் மேற்கொண்டு ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் கைப்பற்றினால் அனில் கும்ப்ளே சாதனையை முறியடிக்கலாம்.