இங்கிலாந்துக்கு தொடர்ந்து 5வது அடி.. ஆஸிக்கு தொடர்ந்து 5வது வெற்றி.. பிரகாசமான அரையிறுதி வாய்ப்பு!

0
516
Australia

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் மிட்சல் மார்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் இடம் பெறவில்லை.

- Advertisement -

இந்த முறை ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் 11 மற்றும் டேவிட் வார்னர் 15 என இருவரும் சீக்கிரத்தில் வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 44, லபுசேன் 71, கேமரூன் கிரீன் 47 ஸ்டாய்னிஸ் 35 மற்றும் கடைசி கட்டத்தில் வந்த ஆடம் ஜாம்பா 29 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோ முதல் பந்திலேயே ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். மற்றும் ஒரு துவக்காட்டக்காரர் டேவிட் மலர் தாக்குப்பிடித்து 50 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்த முறையும் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் 13, கேப்டன் பட்லர் 1 என சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்கள். இன்னொரு பக்கம் பென் ஸ்டோக்ஸ் கடுமையாக போராடி 64 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய மொயின் அலி 42 ரன்கள் சேர்த்து வெளியேறினார். லிவிங்ஸ்டன் 2 ரன்கள் மட்டுமே எடுத்து இந்த முறையும் ஏமாற்றினார்.

கடைசிக் கட்டத்தில் வழக்கம் போல வோக்ஸ் 32, டேவிட் வில்லி 15, ஆதில் ரஷீத் 20 என போராடி விழுந்தார்கள். இறுதியாக இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் 253 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆடம் ஜாம்பா மிகச் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

தற்பொழுது 7 போட்டிகளில் விளையாடி உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு இது ஐந்தாவது வெற்றியாகும். எனவே புள்ளி பட்டியலில் 10 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. கடைசி இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை எதிர்கொள்வதால், ஆஸ்திரேலியா எப்படியும் அரையிறுதிக்கு வந்து விடும் என்பது உறுதி. இங்கிலாந்து கடைசி இடத்திலேயே நீடிக்கிறது!