524 ரன்கள் ; 82.4 ஓவர்கள் ; 6.33 ரன் ரேட் ; டெஸ்ட் கிரிக்கெட்டில் அலறவிடும் இங்கிலாந்து!

0
1471
England

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் விலகிக் கொள்ள, புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ், புதிய பயிற்சியாளராக மெக்கல்லம் இருவரும் கடந்த ஆண்டில் பொறுப்பேற்க, அங்கிருந்து இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் முகம் அதிரடியாக மாற ஆரம்பித்தது, அது இன்று உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றி இருக்கிறது!

இரண்டு நாட்களுக்கு முன்பு உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து பங்கேற்றது.

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்று இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்ய, அயர்லாந்து 172 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதற்கடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் வந்தது. கிரவுலி 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து இன்னொரு துவக்க ஆட்டக்காரர் பென் டக்கட் உடன் ஒல்லி போப் இணைய இந்த ஜோடி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. அனுபவம் இல்லாத அயர்லாந்து வீரர்களால் இவர்களை எதுவுமே செய்ய முடியவில்லை.

- Advertisement -

முதலில் பென் டக்கட் சதம் அடித்து இரட்டை சதம் நோக்கி முன்னேறினார். சிறிது நேரத்தில் போப் சதம் அடித்து அவரும் இரட்டை சதம் நோக்கி முன்னேறினார். இறுதியில் பென் டக்கட் 178 பந்துகளில் 24 பௌண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 182 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 252 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

ஆனால் இன்னொரு முனையில் நின்ற போப் மிகச் சிறப்பாக விளையாடி 207 பந்தில் 205 ரன் எடுத்து தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து ஆட்டம் இழந்தார். இதில் 22 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடக்கம். இதற்கு நடுவில் வந்த ஜோ ரூட் 59 பந்துகளில் நான்கு பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஹாரி புரூக் ஏழு பந்தில் ஒன்பது ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 82.4 பந்துகள் மட்டும் சந்தித்து நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் ரன் ரேட் 6.33. டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் போட்டி போட விளையாடி இருக்கிறது. தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 97 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருக்கிறது!