ஐ.பி.எலில் கேப்டன் பொறுப்பை பெற வாய்ப்புள்ள 5 இளம் வீரர்கள்

0
487
Ruturaj Gaikwad and Ishan Kishan

உலகம் முழுக்க அதிகம் கொண்டாடப்படும் தொடர், இந்தியன் பிரீமியர் லீக். கடந்த காலங்களில் மும்பை அணி ஓர் இளம் வீரரை கேப்டனாக நியமித்து கோப்பைகளை அள்ளியது. இந்திய ஆடுகளத்தில் அதிகம் ஆடிய இளம் வீரருக்கு கேப்டன் பொறுப்பு அளித்தால் அணிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அடுத்த வரும் மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் அதற்கான தேடலில் ஈடுபட உள்ளனர். எதிர்காலத்தில், கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ள 5 வீரர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இஷான் கிஷன்

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இஷான் கிஷன், தான் ஓர் அதிரடி ஆட்டக்காரர் என்பதை அனைவருக்கும் நிரூபித்துவிட்டார். இன்னும் 3 வருடங்களில் எதேனும் ஒரு அணியில் இவருக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ய-19 அணியை வழிநடத்திய அனுபவம் இவரிடம் உள்ளது.

பிரித்வி ஷா

இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷாவை, டெல்லி கேப்பிடல்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. பயம் அறியா ஆட்டக்காரர் பிரித்வி ஷா, டி20யில் சிறப்பாக வீரர்களில் ஒருவருவாரக திகழ்கிறார். கேப்டனாகவும் தன் திறனை காட்டியுள்ளார். இவரது தலைமையின் கீழ் இந்திய அணி ஓர் யு-19 உலகக்கோப்பையை வென்றுள்ளது. அடுத்த டெல்லி அணியின் கேப்டனாக இவர் பொறுப்பேற்க அனைத்து தகுதிகளும் இவரிடம் நிறைந்து காணப்படுகிறது.

ருதுராஜ் கெய்க்வாட்

2021 ஐ.பி.எல் கோப்பையை சென்னை அணி உயர்த்த முக்கிய காரணமாக கெய்க்வாட் திகழ்ந்தார். இம்முறை சென்னை அணி இவரை நான்காவது வீரராக தக்கவைத்துக் கொண்டது. அடுத்து வரும் காலங்களிலும் இவரை நிச்சயம் தக்கவைத்துக் கொள்ளும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மகாராஷ்டிரா அணியை இவர் சிறப்பாக வழிநடத்துகிறார். தோனியுடன் இணைந்து செயல்படுவது இவரை இன்னும் சிறந்த வீரராக மாற்றும். எம்.எஸ்.தோனிக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இவர் தலைமை தாங்குவார் என்று அனைத்து ரசிகர்களும் எண்ணுகின்றனர்.

ஷுப்மன் கில்

கே.கே.ஆர் அணியின் வருங்கால கேப்டன், ஷுப்மன் கில் என்று பலர் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால் கொல்கத்தா நிர்வாகம் அவரை தக்கவைத்துக் கொள்ளாமல் அதிர்ச்சி அளித்தது.. தற்போது பல அணிகள், தங்களுக்கு ஓர் சிறந்த கேப்டனை வாங்கவுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கில், இவ்வருடம் இல்லை என்றாலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் கேப்டனாகும் வாய்ப்பு அதிகமுள்ளது.

வாஷிங்டன் சுந்தர்

இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கடைசி வீரர் வாஷிங்டன் சுந்தர். மற்ற 4 வீரர்களைக் காட்டிலும் இவருக்கு குறைந்த வயதில் அதிக அனுபவம் கிடைத்துள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் கேப்டனாக செயல்பட்ட அனுபவமும் இவரிடமுள்ளது. ஆகையால் அடுத்து வரும் காலங்களில் கேப்டன் வாஷிங்டன் சுந்தரை நாம் காண வாய்ப்பு உள்ளது