5 விக்கெட் 4 எக்கனாமி.. பிரம்மாண்ட சாதனை.. 20 வயதில் அட்டகாசம்.. யார் இந்த துனித் வெல்லாலகே?

0
872
Wellalage

இன்று மிக முக்கியமான போட்டியில் ஆசியக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்திய அணி ஆசியக்கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் தன் முதல் போட்டியில் நேற்று பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் என்கின்ற பிரம்மாண்டமான ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய அணி களம் இறங்கி, இரண்டாவது சுற்றில் தனது இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் சர்துல் நீக்கப்பட்டு அக்சர் சேர்க்கப்பட்டார்.

இதை எடுத்து இந்திய அணிக்கு பவர்பிளே மிகவும் அருமையான ஒன்றாக அமைந்தது. விக்கெட் கிளப்பில்லாமல் பத்து ஓவர்களை இந்தியா 6 ரன் ரேட்டுக்கு மேல் கடந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், இலங்கை அணியின் 20 வயதான இளம் இடதுகை சுழற் பந்துவீச்சாளர் துணித் வெல்லாலகே வந்ததும் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.

அவர் தனது முதல் ஓவரின் முதல் பந்தில் சுப்மன் கில்லை கிளீன் போல்ட் செய்தார். இதற்கு அடுத்த ஓவரில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மாவையும் வெளியேற்றினார்.

இதற்கு அடுத்து அவர் தனது இரண்டாவது ஸ்பெல்க்கு வந்து மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கே எல் ராகுல் விக்கெட்டை தானே கேட்ச் பிடித்து கைப்பற்றினார். மேற்கொண்டு தனது பத்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் விக்கெட் கீப்பர் கேட்ச் மூலமாக ஹர்திக் பாண்டியா விக்கெட்டை கைப்பற்றினார். இவர் பத்து ஓவர்களில் 40 ரன்கள் தந்து இந்திய அணியின் முக்கிய ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

தற்பொழுது 20 வயதான இவர் 2022 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையில் 17 விக்கெட்களை வீழ்த்தி, மேலும் பேட்டிங்கில் அற்புதமான சதம் அடித்திருந்தார். அதே ஆண்டு இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் இடம் பிடித்தார். மேலும் அதே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் இவரது திறமையை உணர்ந்து இவருக்கு வெகு சீக்கிரத்தில் சர்வதேச வாய்ப்பை வழங்கியது. அதை மிகச் சரியாகப் பிடித்துக் கொண்ட இவர் தற்பொழுது ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மிக முக்கிய போட்டியில் அற்புதமாக செயல்பட்டு அணியை காப்பாற்றினார்.

இந்த நிலையில் இந்த போட்டியில் வென்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற நல்ல வாய்ப்பிருக்கின்ற நிலையில், இந்திய அணியின் முக்கிய ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணிக்கு பெரிய சாதகத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார். மேலும் மிக இளம் வயதில் இலங்கை ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்!