ஐ.பி.எலில் ஃபீல்டிங்கிற்காக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வீரர்கள்

0
2662
Lalit Yadav and Anukul Roy

உலகில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட தொடர், இந்தியன் பிரீமியர் லீக். இத்தொடர் ஒவ்வொரு வருடமும் நமக்கு திறமைவாய்ந்த பல இளம் வீரர்களை அளிக்கிறது. மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், உலகின் தலைசிறந்த வீரர்கள் உள்நாட்டு வீரர்களுடன் இணைத்து ஆடுவது. அது இல் வீரர்களின் நம்பிக்கையை உயர்த்துகிறது. ஒரு அணிக்கு பேட்டிங், பவுலிங் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஃபீல்டிங்கும் முக்கியம்.

ஃபீல்டர் தடுக்கும் ஒவ்வொரு ரன்னும் வெற்றியை தேடித் தரக்கூடும். அதற்கு சிறந்த உதாரணம் மும்பை இந்தியன்ஸ். இரண்டு முறை 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையை வென்றது. அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் எளிதில் வாய்ப்புக் கிடைப்பதில்லை. இருப்பினும் அவர்கள் மாற்று ஃபீல்டராக களமிறங்கி அணிக்கு பணியாற்றுகின்றனர். ஐ.பி.எலில், ஃபீல்டிங்கிற்காக பயன்படுத்தப்பட்ட 5 வீரர்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

அனுகுல் ராய் – மும்பை இந்தியன்ஸ்

யு-19 நட்சத்திர வீரரான அனுகுல் ராய் 2019ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகினார். அதற்கு அடுத்தடுத்த வருடங்களில் அவர் மும்பை நிர்வாகத்தால் தக்கவைத்துக் கொல்லப்பட்டார். ஆனால் வாய்ப்புகள் கொடுக்கவில்லை. இருப்பினும் பல போட்டிகளில் முக்கிய கேட்சுகளை எடுத்து அணியின் ஆட்டத்தை மாற்றியுள்ளார்.

பவன் நெகி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

இவர் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஆவார். தற்போது 2021ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உள்ளார். சென்ற ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மாற்று வேறாக ஃபீல்டிங் செய்து உதவினார். பெங்களூர் அணி இவருக்கு ஒரு சில போட்டிகளில் வாய்ப்புக் கொடுத்தது. ஆனால் அவர் அதை சரியா பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

ஜெகதீஷ் சுசித் – கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இந்தப் பட்டியலில் இருக்கும் மற்றொரு ஆல்ரவுண்டர், ஜெகதீஷ் சுசித். இவர் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். கடந்த ஆண்டு பஞ்சாப் – ஹைதராபாத் போட்டியில் மனிஷ் பாண்டேவின் கடினமான கேட்ச்சை பிடித்து அசத்தினார். அதே போல் இந்தாண்டும் ஹைதராபாத் அணிக்காக ஃபீல்டிங்கில் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

லலித் யாதவ் – டெல்லி கேப்பிட்டல்

நடப்பு ஐ.பி.எல் தொடரில் லலித் யாதவ், டெல்லி அணிக்காக ஒரு சில போட்டிகளில் களமிறங்கினார். இவர் ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் ஆவார். கொடுத்த வாய்ப்புகளில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக பங்காற்றியுள்ளார். லலித் யாதவ், இந்த ஆண்டு தான் அறிமுகப் போட்டியை ஆடினார். அதற்கு முன் மாற்று வீராரக ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோவ்மன் பாவல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ரோவ்மன் பாவல் எனும் வீரர் 2017ல் கொல்கத்தா அணியில் இருந்தார் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. அவர் ஐ.பி.எல் தொடரில் அறிமுகமாகாவிட்டாலும் ஃபீல்டிங்கில் மற்றும் வேறாக பங்காற்றியுள்ளார். இவரைப் போல பல வீரர்கள் இன்னுமும் தகுந்த வாய்ப்புகள் கிடைக்காமல் இதுபோல் அணியில் உள்ளனர்.