2006ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக டி20 போட்டியில் விளையாடி வரும் 5 வீரர்கள்!

0
120
T20

கிரிக்கெட் போட்டி தற்போது ஐசிசியால் மூன்று வடிவங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கிரிக்கெட்டில் முதல் வடிவமான டெஸ்ட் போட்டி 1800 ஆண்டில் துவங்கப்பட்டது. இதற்கு அடுத்த ஒருநாள் போட்டி வடிவம் முதன்முதலில் 1971 ஆம் வருடம் ஜனவரி 5ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆடப்பட்டது. அடுத்து டி20 கிரிக்கெட் வடிவம் முதன்முதலில் 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெண்கள் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்து 2005 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆக்லாந்து மைதானத்தில் டி20 ஆண்கள் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

20 கிரிக்கெட் வடிவம் இளைஞர்களுக்கு ஆனது என்று கூறப்பட்டாலும், ஏறக்குறைய அப்போது இருந்து இப்போது வரை 2006ஆம் ஆண்டு அறிமுகமாகி,15 ஆண்டுகளுக்கு மேலாக டி20 போட்டிகளில் விளையாடி வரும் 5 வீரர்களை பற்றி தான் இந்த வீடியோ தொகுப்பில் நாம் பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக்:

2006 ஆம் ஆண்டு இந்திய அணி தனது முதல் டி20 போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடியது அந்தப் போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்று இருந்ததோடு, போட்டியில் விளையாடி ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார். அப்போது இருந்து இப்போது வரை அவர் டி20 போட்டிகளை இந்திய அணிக்காகவும் தமிழக அணிக்காகவும் ஐபிஎல் அணிகளுக்காகவும் தொடர்ந்து விளையாடி வருகிறார். மேலும் அவர் இந்திய அணியில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு இடம்பிடித்து தற்போது விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் கெய்ல் :

- Advertisement -

கிரிக்கெட்டின் அதிரடி வடிவம் கிறிஸ் கெயில் என்று கூறலாம். டி20 போட்டிகளில் அடையாள வீரர்களில் இவரும் ஒருவர். தி யுனிவர்சல் பாஸ் என்று புகழப்படுபவர் 2006ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக முதன்முதலில் டி20 போட்டியில் அறிமுகமானார். கடைசியாக இவர் 2021 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையோடு ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். இதற்கு இடையில் அவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக டி20 போட்டியில் விளையாடி இருக்கிறார்.

ஷகிப் அல் ஹசன் :

தற்போது பங்களாதேஷ் டி20 அணிக்கு மீண்டும் கேப்டனாக திரும்பியிருக்கும் இவர் முதன்முதலில் 2006ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக டி 20 போட்டிகளில் அறிமுகமானார். அப்போது இருந்து இப்போது வரை தனது தேசிய அணிக்கு விளையாடும், அதோடு உள்நாட்டு டி20 அணிக்கும் ஐபிஎல் அணிகளுக்கும் விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் இவரை எந்த அணிகளும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீன் வில்லியம்ஸ்:

ஷகிப் அல் ஹசன் அறிமுகமான அதே போட்டியில் 2006ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்த ஜிம்பாப்வே வீரர் அறிமுகமானார். அப்போது இருந்து இப்போது வரை இவர் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடி வருகிறார்.

முஷ்பிகுர் ரகுமான் :

பங்களாதேஷ் அணியின் தூண்களில் ஒருவரான இந்த சீனியர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஷகிப் அல் ஹசன் சீன் வில்லியம்ஸ் இருவரும் அறிமுகமான அதே போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை பங்களாதேஷ் அணிக்காகவும் உள்ளூர் டி20 அணிக்காகவும் விளையாடி வருகிறார். தற்போது ஆசிய கோப்பை பங்களாதேஷ் அணியில் விக்கெட் கீப்பர் இவர்தான்!