50 ஓவர் ஃபார்மட்டில் நீண்ட காலம் ஆடிய 5 வீரர்கள்

0
1442
Sachin Tendulkar and Mithali Raj

எந்த ஒரு விளையாட்டிலும் நீண்ட வருடம் தொடர்ந்து ஆடுவது மிகவும் கடினமான காரியம் தான். ஒரு வீரர் சர்வதேச அளவில் ஆட வேண்டுமெனில் அதற்கு அவர் பல படிகளைத் தாண்ட வேண்டும். தேசிய அணியில் அறிமுகமாக திறனுடன் நுட்பமும் மிக அவசியம். சர்வதேச அளவில் வாய்ப்புக் கிடைப்பதை விட முக்கியமான ஒன்று அதை தக்கவைத்துக் கொள்வது.

தற்போது உள்ள பல இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக படுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். அதே சமயம் ஒரு சில வீரர்கள் இளம் வயது முதல் கிரிக்கெட் கேரியர் முடியும் வரை தொடர்ந்து அணிக்காக உழைதுள்ளனர். நடுவில் ஃபார்ம் அவுட் ஆவது சகஜம் தான். 50 ஓவர் ஃபார்மட்டில் அதிக வருடங்கள் ஆடிய வீரர்களைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

- Advertisement -

5.கிறிஸ் கெயில் – 19 வருடங்கள், 337 நாட்கள் *

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஒப்பனர் கெயில், தனது முதல் ஒருநாள் போட்டியை இந்திய அணிக்காக 1999ஆம் ஆண்டில் ஆடினார். 19 வயதான கிறிஸ் கெயில் அப்போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கினார். எட்டு பந்துகளில் வெறும் ஒரே ரன் மட்டுமே சேர்த்து ராபின் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவ்வொருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது வரை அவர் 301 போட்டிகளில் விளையாடி உள்ளார். கெயில் இன்னும் தன்னுடைய ஓய்வை அறிவிக்கவில்லை. ஆகையால் இப்பட்டியலில் அவர் முன்னேற நிறைய வாய்ப்புகள் உள்ளது.

4.ஜவெத் மியாண்டாட் – 20 வருடங்கள், 272 நாட்கள்

இரண்டு தசாப்தத்தில் 233 போட்டிகளில் ஜவெத் மியாண்டாட் களமிறங்கியுள்ளார். ஆனாலும் அவரது ஒருநாள் கிரிக்கெட் ரெகார்ட்ஸ் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இருப்பினும் பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த வீரராக அவர் கருதப்படுகிறார். அதற்கு முக்கிய காரணம், 1992 உலகக் கோப்பை. அத்தொடரில் அவர் 6 அரை சதங்கள் விளாசியதன் மூலம் பாகிஸ்தான் அணி கோப்பையை முத்தமிட்டது. மியாண்டாட் தான்னுடைய கடைசி ஒருநாள் போட்டியை 1996 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக ஆடினார். அவரது அறிமுகப் போட்டி மற்றும் கடைசிப் போட்டி என இரண்டும் இந்திய அணிக்கு எதிரானது தான்.

3.சனத் ஜெயசூரியா – 21 வருடங்கள், 184 நாட்கள்

இலங்கை அணியின் பயமறியா ஒப்பனர், சனத் ஜெயசூரியா. இலங்கை அணிக்காக அவர் 5 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடியுள்ளார். அதில் 1996ல் சாம்பியன் பட்டமும் வென்றார். ஜெயசூரியா, தன்னுடைய 20 வயதில் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டராக அணியில் இணைந்தார். 1989ம் ஆண்டு இலங்கை அணியின் சுற்றுப்பயணத்தில் அவர் அறிமுகமாகினார். 5வது வீரராக களமிறங்கி 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். தன்னுடைய கடைசி போட்டியை 2011ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஆடினார். ஜெயசூரியா அப்போட்டியில் 4 பந்துகளில் வெறும் 2 ரன்கள் தான் அடித்தார். தன்னுடைய முதல் மற்றும் கடைசி போட்டி இரண்டிலும் இலங்கை அணி தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2.மித்தாலி ராஜ் – 21 வருடங்கள், 264 நாட்கள் *

இப்பட்டியலில் இருக்கும் ஒரே வீராங்கனை, மித்தாலி ராஜ். கிட்டத்தட்ட இரண்டு தசாப்த்ததிற்கும் மேல் இந்திய அணிக்காக ஆடி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் அதிமன்னனா் செலுத்துவதற்காக 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து தன்னை விளக்கி கொண்டார். மித்தாலி ராஜ், 2022 மகளிர் உலகக் கோப்பை வரை ஆடும் எண்ணத்தில் உள்ளார். அப்படி ஆடினால், இப்பட்டியலில் அவர் முதல் இடத்திற்கு முன்னேறிவிடுவார். மித்தாலி ராஜின் அறிமுகப் போட்டி மறக்க முடியாத ஒன்று. அயர்லாந்து அணிக்கு எதிராக அபார சதம் விளாசிய இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

1.சச்சின் டெண்டுல்கர் – 22 வருடங்கள், 91 நாட்கள்

சந்தேகமே தேவை இல்லை, முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் தான் உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டின் மன்னனாக சச்சின் திகழ்கிறார். கிரிக்கெட் உலகில் இவர் பல சாதனைகள் படைத்துள்ளார். பெரும்பாலும் எந்த ஒரு ரெக்கார்டை எடுத்தாலும் அதில் கிரிக்கெட் கடவுள் சச்சினின் பெயர் நிச்சயம் இருக்கும். டெண்டுல்கரின் அறிமுகப் போட்டி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்றது. அதில் அவர் டக் அவுட் ஆனார். மேலும் அப்போட்டியில் இந்திய அணி தோற்றது. ஆனால் அடுத்தடுத்து ஆடிய போட்டிகளில் அவர் விளையாட்டாக சதம் விளாசத் தொடங்கினார். நாளைடைவில் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் பெற்றார்.