இதுவரை ஐ.பி.எல் கோப்பை வென்றுள்ள 5 பாகிஸ்தான் வம்சாவளி வீரர்கள்

0
859
Imran Tahir and Sohail Tanvir

டி20 தொடர்களில் மிகவும் புகழ்பெற்ற தொடர் ஐ.பி.எல். இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கும் உள்ள பல இளம் வீரர்கள் இத்தொடர் மூலம் பயனடைகிறார்கள். சில காரணங்களால் நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் முதல் ஐ.பி.எல் தொடரில் மட்டும் அந்நாட்டு வீரர்கள் பங்கேற்றார்கள். பாகிஸ்தான் நாட்டில் பிறந்து வேறு நாட்டிற்காக விளையாடும் வீரர்கள் ஐ.பி.எலில் களமிறங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக ஓவைஸ் ஷா, உஸ்மான் கவாஜா. இவர்களைப் போல இன்னும் சில வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள். பாகிஸ்தானில் பிறந்த வீரர்களில் 5 நபர்கள் ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளனர். அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு காண்போம்.

கம்ரன் அக்மல் – 2008

2008ல் ஐ.பி.எல் ஆரம்பித்த காலத்தில் கம்ரன் அக்மல் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஆகையால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை வாங்கியது. விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான இவர் 6 போட்டிகளில் 128 ரன்கள் அடித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 164. இது போற்றக்கூடிய விசியங்களில் ஒன்று.

சோகைல் தன்வீர் – 2008

ஐ.பி.எல் வரலாற்றில் அபாரமாக செயல்பட்ட பாகிஸ்தான் வீரர்களில் முதன்மையானவர் சோகைல் தன்வீர். உண்மையில் சொல்லப்போனால் ராஜஸ்தான் அணி கோப்பையை உயர்த்த தன்வீர் முக்கிய காரணமாக விளங்கினார். 2008 தொடரில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி ‘ பர்ப்பில் கேப்பையும் ‘ வென்றார். அவரது சிறந்த பந்துவீச்சான 6/14 பல வருடங்களாக அசைக்க முடியாத சாதனையாக அமைந்தது.

யூனிஸ் கான் – 2008

இப்பட்டியலில் இருக்கும் கடைசி ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யூனிஸ் கான். டெஸ்ட் கிரிக்கெட்டில் லெஜன்டாக விளங்கிய யூனிஸ் கானால் டி20 கிரிக்கெட்டில் பெரிதாக சாதிக்க இயலவில்லை. முதல் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் களமிறங்கி 3 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போடிக்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இம்ரான் தாஹிர் – 2018 & 2021

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இம்ரான் தாஹிர், சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாபிரிக்கா அணிக்காக விளையாடினார். இவர் ஐ.பி.எலில் டெல்லி, புனே மற்றும் சென்னை அணிகளுக்காக பங்கேற்றார். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ்காக இரு முறை கோப்பையை முத்தமிட்டுள்ளார். அது தவிர்த்து 2019ல் 26 விக்கெட்டுகள் கைபற்றி அதிக விக்கெட்டுகள் வீழ்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொயின் அலி – 2021

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி 2018 முதல் ஐ.பி.எல் தொடரில் கலந்துகொண்டு வருகிரார். 2021 ஏலத்தில் சென்னை அணி இவரை வாங்கி சிறப்பாக உபயோகித்து. பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் நன்றாக பங்களித்தார். பைனலிலும் அதிரடியாக பேட்டிங் செய்து அணிக்கு முக்கிய ரன்களை சேர்த்தார். இவரைப் போன்ற ஆல்ரவுண்டர்கள் கிடைப்பது கஷ்டம் என்பதால் சி.எஸ்.கே அணி இவரை அடுத்த ஆண்டுக்குத் தக்கவைத்துக் கொண்டது.