சர்வதேச டி20யில் இந்திய அணிக்காக களமிறங்கிய 5 பிரபலமடையாத வீரர்கள்

0
551
Rahul Sharma and Parvinder Awana

தேசிய நாட்டிற்காக ஆட வேண்டுமென்பது பல கிரிக்கெட் ரசிகர்களின் ஏக்கம். ஆனால் அனைத்து வீரர்களாலும் அணிக்குள் நுழைந்து விட இயலாது. அதற்கு அவர் பல கோடி வீரர்களை கடக்க வேண்டும். அணிக்குள் தேர்வாவதை விட, தொடர்ந்து அங்கு நீட்டிதிருப்பது தான் மிகவும் கடினம். 2 அல்லது 3 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பினாலே மாற்று வீரர் அவ்விடத்தில் அமர்ந்து கொள்வார்.

ஆட்டத்தின் தன்மைக்கேற்ப பொறுப்பாக ஆடினால் மட்டுமே சர்வதேச அளவில் சாதனைகள் படைக்க முடியும். இந்திய அணிக்காக ஏராளமான வீரர்கள் களமிறங்கியுள்ளனர். பெரும்பாலான தங்களுக்கு கிடைத்த வாய்ப்பைத் தக்க வைதுக்க கொள்ளவில்லை. 20 ஓவர் போட்டியில் நமக்கு தெரியாத பல வீரர்கள் இந்திய சீருடை அணிதுள்ளனர். அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

சுதீப் தியாகி

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சுதீப் தியாகி, 2007 – 08 ரஞ்சித் தொடரில் சிறப்பாக பந்துவீசி 21.63 சராசரியில் 41 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அத்தொடர் மூலம் அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். 2009ஆம் ஆண்டு ஏலத்தில் சென்னை அணியில் விளையாடும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

2009ல் இலங்கைக்கு எதிரான தொடரில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு வந்தது. காயத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவர் இரண்டு ஓவர்களில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் கைபற்றாமல் முடித்தார். அத்தொடருக்கு பின் அவர் இந்திய அணிக்காக மீண்டும் ஆடவே இல்லை.

ராகுல் ஷர்மா

ராகுல் ஷர்மா, உயரமான லெக் ஸ்பின்னர். அனில் கும்ப்ளேவைப் போல ஸ்டம்ப் – ஸ்டம்ப் மற்றும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பந்துகள் போடக்கூடியவர். துரதிர்ஷ்டவசமாக ‘ பெல்ஸ் பாஸ்லி ‘ எனும் நோயால் அவரது பார்வை பாதிக்கப்பட்டது.

- Advertisement -

ஐ.பி.எலில் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. சிட்னியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20யில் அவர் அறிமுகமானார். முதல் இரண்டு போட்டிகளில் சுமாராக பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் ( 7.34 எக்கனாமி ). 2012ல் போதை மருந்து உட்கொண்டதால் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்ட்டார். அதன் பிறகு மீண்டும் அவர் அணிக்குள் நுழையவில்லை.

ரிஷி தவான்

இந்திய அணி எதிர்பார்த்த திறன் கொண்ட ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ரிஷி தவானும் ஒருவர். 2014 ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 13 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். மேலும், உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார். ஆதலால் அவருக்கு இந்திய அணியில் ஆடும் வாய்ப்புக் கிடைத்தது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அவர் ஒருநாள் தொடர் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். ஆனால் அந்த சுற்றுப்பயணத்தில் அவர் 20 ஓவர் போட்டிகளில் ஆடவில்லை. பின்னர் 2016ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அறிமுக டி20 போட்டியில் அதிக ரன்களுக்கு போனார். 4 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து 42 ரன்கள் விட்டுக்கொடுத்தார். கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

நமன் ஓஜா

உள்ளூர் போட்டிகளில் மத்திய பிரதேச அணிக்காக அவர் 10,000 ரன்களுக்கு அருகே அடித்துள்ளார். பேட்டிங்கில் தன் திறனை வெளிப்படுத்திய ஓஜாவால் கீப்பிங்கில் பெரிதாக ஜொலிக்க இயலவில்லை.

2010ம் ஆண்டு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் மூலம் இவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். முதல் 2 போட்டிகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன் பிறகு அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். நம்மில் பல பேருக்கு இவர் இந்திய அணிக்காக ஆடி இருக்கிறார் என்பது தெரியாது.

பர்விந்தேர் அவானா

உள்ளூர் போட்டிகளில் அவானா, டெல்லி அணிக்காக களமிறங்கினார். இவர் அதிக வேகம் போடக்கூடிய வீரர். தன் பெயருக்கு பின்னால் 191 விக்கெட்டுகள் வைத்துள்ளார். மேலும், 2014 ஐ.பி.எலில் பஞ்சாப் அணியின் அதிக விக்கெட் டேக்கரும் இவரே.

2012 இங்கிலாந்து டி20 தொடரில் விளையாட அவருக்கு அழைப்பு வந்தது. அவ்வாய்ப்பை அவர் பயனுள்ளதாக மாற்றவில்லை. முதல் இரண்டு போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 71 ரன்கள் விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.