2023 ஆசியக் கோப்பை இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட 5 முக்கிய வீரர்கள்!

0
2484
ICT

2023 ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 18-வது பேக்கப் வீரராக சஞ்சு சாம்சன் இந்த இந்திய அணி உடன் ஆசியக் கோப்பைக்கு பயணம் செய்கிறார்.

இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான திட்டங்களில் இருந்தும், அணியில் இடம் பெற்று விளையாடி வந்த ஐந்து வீரர்கள் அதிரடியாக கழட்டி விடப்பட்டிருக்கிறார்கள். பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா அணிக்குள் வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படி சில காலமாக இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை திட்டத்தில் பயணித்து வந்து, தற்பொழுது ஆசியக் கோப்பையில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் நான்கு வீரர்கள் யார்? என்று, இந்த சிறிய கட்டுரை தொகுப்பில் பார்ப்போம்.

யுஸ்வேந்திர சாகல் :

இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கான நிரந்தர மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளராக தொடர்ந்து இருந்து வருபவர். மாறிவரும் கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசை ஆழமாக இருக்க வேண்டியது முக்கியமாக இருக்கிறது. இவரையும் குல்திப்பையும் அணியில் வைத்தால், நம்பர் ஏழோடு இந்திய பேட்டிங் வரிசை முடிந்து விடுகிறது. இவருக்கு நல்ல திறமை இருந்தும், இப்படியான காரணத்தால் அணியில் இடம் பிடிக்க முடியாமல் போயிருக்கிறது.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஷ்வின்:

இன்றைய கிரிக்கெட் உலகில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியும் தரத்தைக் கொண்டிருக்கின்ற ஒரே ஆப் ஸ்பின் பவுலர். ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை இரண்டும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகளில் நடைபெறுகின்ற போதும், இந்திய அணியில் ஒரு ஆப் ஸ்பின்னர் இல்லை என்கின்ற போதும், கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை எடுத்த காரணத்தினால், இவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

உம்ரான் மாலிக் :

இந்தியாவின் தற்போதைய கிரிக்கெட்டில் அதிவேக பந்துவீச்சாளர் இவர்தான். மேலும் எல்லா காலத்திற்குமான இந்திய அதிவேக பந்துவீச்சாளராகவும் இவர் இருக்கிறார். இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் ஒருநாள் கிரிக்கெட் தயாரிப்பில் இவர் தொடர்ந்து இடம் பிடித்து வந்தார். பவர் பிளே முடிந்து நடு ஓவர்களில் வேகப்பந்து வீச்சு தாக்குதலை தொடுக்க இவரை தயார் செய்தார்கள். ஆனால் இந்த முறை திடீரென கழட்டி விட்டு இருக்கிறார்கள்.

அர்ஸ்தீப் சிங் :

இந்திய அணிக்கு தற்பொழுது இடது கை வேகப் பந்துவீச்சாளர் இல்லாத குறை இருந்து வருகிறது. இந்த காரணத்தால் இவருக்கு இந்திய அணியில் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. ஆனால் இவரை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் டி20 கிரிக்கெட்டோடு நிறுத்திக் கொண்டு இருக்கிறது.

வாஷிங்டன் சுந்தர் :

ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தை இவர் பூர்த்தி செய்வார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் வளர்க்கப்பட்டார். தற்பொழுது அயர்லாந்து டி20 தொடர் இந்திய அணியில் இருக்கிறார். தற்போதைய ஆசிய கோப்பை இந்திய அணியில் ஒரு ஆப் ஸ்பின்னர் இல்லாத போதும் கூட, இவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. காயமடைவதற்கு முன்னால் கூட நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

2023 ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.