நான் முன்னையே முடிவு பண்ணிட்டேன்.. பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது இப்படித்தான் – அமெரிக்கா கேப்டன் பேச்சு

0
522
Monank

ஐசிசி ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அமெரிக்கா அணி அசத்தி இருக்கிறது. இந்த மிக முக்கியமான வரலாற்று பற்றி குறித்து அமெரிக்க அணியின் கேப்டன் மோனன்க் படேல் பேசி இருக்கிறார். மேலும் இந்த வெற்றியில் இவர் அரைசதம் அடித்து முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறார்.

இந்த போட்டியில் அமெரிக்க அணி டாஸ் வெல்ல முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. அமெரிக்க அணி பவர் பிளேவில் மிகச் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்தியது. பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 43 பந்தில் 44 ரன்கள் மெதுவாக எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்கா அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் பாகிஸ்தான் எடுத்த அதே 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் மோனன் படேல் 38 பந்தில் 50 ரன்கள் எடுத்தார்.இதன் காரணமாக போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

பாகிஸ்தான் அணிக்கு முதலில் சூப்பர் ஓவரில் பந்து வீசிய முகமது ஆமீர் அந்த ஓவரில் 18 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இது தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியால் ஒரு விக்கெட் இழந்து 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அமெரிக்கா அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தியது.

இந்த வரலாற்று வெற்றிக்கு பின் பேசிய அமெரிக்க கேப்டன் கூறும் பொழுது ” முதல்முறையாக பாகிஸ்தானுடன் விளையாடும் பொழுது அந்த அணியை வீழ்த்தியது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது. நாங்கள் முதல் 6 ஓவர்களில் அவர்களை சிறப்பாகக் கட்டுப்படுத்தினோம். அதற்கு அடுத்து அவர்கள் ஒரு பார்ட்னர்ஷிப் கிடைக்கும் பொழுது முன்னோக்கி செல்வார்கள் என்று தெரிந்து அமைதி காத்தோம். அவர்களை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எங்களுக்கு மகிழ்ச்சி.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க இந்த 3 விஷயத்துல சரியே கிடையாது.. இதனாலதான் அமெரிக்கா கிட்ட கூட தோத்துட்டோம் – பாபர் அசாம் வருத்தம்

இதன் காரணத்தால் நாங்கள் போட்டியில் இருக்கிறோம் என்று எங்களுக்கு தெரியும். மேலும் எங்களுக்கும் ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. பார்ட்னர்ஷிப்பை ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருந்தது. கௌஸ் சிறப்பான ஷாட்களை விளையாடி அழுத்தத்தை நீக்கினார். ஒரு வீரர் மற்றும் கேப்டனாக நீங்கள் பெரிய சந்தர்ப்பத்தில் சிறப்பாக விளையாட நினைக்கிறீர்கள். நான் இந்த போட்டியில் அணியின் வெற்றிக்காக ஏதாவது செய்ய வேண்டுமென முன்பே நினைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.