பாகிஸ்தான் அணி அல்ல.. யார் வந்தாலும் எங்கள் இலக்கு இதுதான்.. வேட்டையாட காத்திருக்கிறோம்.. ஹர்திக் பாண்டியா நம்பிக்கை

0
206

டி20 உலக கோப்பையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியமான போட்டி நடைபெற உள்ளது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டு எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியும் இதே மைதானத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதாகவும், அதனால் இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது எனவும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலானது. இதை கவனித்த ஹர்திக் பாண்டியா தற்போது இதற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். டி20 உலக கோப்பையை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி ஒரே ஒருமுறை மட்டுமே இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது.

2021ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தான் இந்திய அணியை வீழ்த்தியது. அதற்குப் பிறகு 2022ஆம் ஆண்டு விராட் கோலி அதற்குத் தக்க பதிலடி கொடுத்து இந்திய அணியை சிறப்பாக மீட்டு எடுப்பார். இந்நிலையில் அடுத்து வருகிற போட்டி இருநாட்டு ரசிகர்கள் இடையேயும் மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது
“நான் இப்போதுதான் ஒரு தகவலை கேள்விப்பட்டேன். எங்கள் அணியில் மொத்தமாக அனைவரும் 892 டி20 போட்டிகள் விளையாடி இருக்கிறார்கள். இதன் மூலம் எங்களுக்கு எவ்வளவு அனுபவம் இருக்கும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக எங்கள் அணியில் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் போன்ற ஒரு வீரர் இருக்கிறார்.

மேலும் முகமது சிராஜ் இந்திய அணியில் தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறார். இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான சாதனைகளை செய்து வருகிறார். மேலும் இரண்டு உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவமும் அவருக்கு இருக்கிறது. எங்கள் அணியில் பந்துவீச்சில் மட்டுமே நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதையும் படிங்க:அமெரிக்கா வெற்றி.. பாகிஸ்தான் தோல்விக்கு காரணமான 2 இந்திய முன்னாள் உள்நாட்டு வீரர்கள்

மேலும் இங்குள்ள ஆடுகளமும் எங்களுக்கு சாதகமாக இருக்கிறது. நாங்கள் இது போன்ற ஒரு தொடக்கத்தை தான் எதிர்பார்த்தோம். நாங்கள் இந்த உத்வேகத்தை தொடர் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறோம்.நீங்கள் கடுமையாக உழைத்தால் உங்களுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடுவது மகிழ்ச்சி. இந்தியா, பாகிஸ்தான் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தற்போது வேட்டையாடுவது மட்டுமே எங்கள் ஒரே இலக்கு. அந்த நாள் எங்களுக்கு நல்ல நாளாக அமையும் என்று கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -