ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சாதித்த 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள்.!

0
1106

கிரிக்கெட் விளையாட்டின் மூலம் ஜீரோவில் இருந்து ஹீரோவானவர்கள் பல பேர் இருக்கின்றனர்.
இந்தியா அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரிலிருந்து இன்றைய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வரை அனைவருமே மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இன்று அவர்கள் மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக இருப்பதற்கு காரணம் அவர்களது திறமை தான்

இன்று சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்ல அது ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்களின் எழுச்சியால் பல்வேறு இளைஞர்களும் கிரிக்கெட்டின் மூலம் பொருளாதார நிறைவடைந்ததோடு அவர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கிறது. இதேபோன்று கிரிக்கெட்டில் தங்களது திறமையாலும் கடின உழைப்பாலும் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து வந்து இன்று கோடீஸ்வரர்களாக வளம் வரும் ஐந்து இளம் கிரிக்கெட் வீரர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

ரிங்கு சிங்:
மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் இருந்து கிரிக்கெட் விளையாட்டிற்கு வந்த இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக ஒரு ஓவரில் 5 சிக்ஸர்களை அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதன் மூலம் கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமடைந்தார். இவரது தந்தை வீடு வீடாக சென்று எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னுடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தான் கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு பொருளாதார சிக்கல்களை கடந்து வந்திருக்கின்றனர் என்பதை தனது அறிமுக போட்டியில் போது மனம் உருக தெரிவித்திருந்தார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டின் மூலம் நல்ல பொருளாதார நிலையை அடைந்திருப்பது சர்வதேச கிரிக்கெட்டிலும் அருமையான துவக்கத்தை கண்டிருக்கிறார் இவர் .

திலக் வர்மா:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இடது கை ஆட்டக்காரரான திலக் வர்மா 2020 ஆம் ஆண்டு இந்திய அண்டர் 19 அணிக்காக விளையாடியவர். 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மூலம் கவனத்தை ஈர்த்த இவர் கடந்த வருட ஐபிஎல் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடினார். இந்த வருட ஐபிஎல் இல் இவரது பக்குவமான ஆட்டம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் இவரை இடம்பெறச் செய்தது . அந்தத் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வருமா தற்போது இலங்கையில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை போட்டிகளுக்கும் தேர்வாகி இருக்கிறார். மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்த இவர் ஐபிஎல் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் கால் பதித்திருப்பதன் மூலம் நல்ல பொருளாதார நிலையை அடைந்திருக்கிறார் .

குல்தீப் சென்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான இவர் ஐபிஎல் போட்டிகளின் மூலம் பிரபலம் அடைந்த மற்றும் ஒரு வீரர் ஆவார். இவரது அதிவேக பந்துவீச்சு மற்றும் யார்கர் மூலம் ரசிகர்களின் கவனத்தையும் கிரிக்கெட் விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இவரது தந்தை சலூன் கடையில் பார்பராக வேலை பார்த்தவர். தனது கடின உழைப்பின் மூலம் கடந்த வருட இறுதியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் இவர் இடம் பெற்று சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார்.

- Advertisement -

உம்ரான் மாலிக்:
ஜம்மு காஷ்மீர் எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக் தந்தை காஷ்மீரில் சிறிய அளவில் பல வியாபாரம் செய்து வருபவர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வலை பயிற்சி பந்துவீச்சாளராக அறிமுகமான இவர் தனது கடின உழைப்பு மற்றும் திறமையின் காரணமாக அந்த அணியில் இடம் பெற்று கடந்த இரண்டு வருடங்களாக விளையாடி வருகிறார். 2022 ஆம் ஆண்டில் இவரது சிறப்பான பந்துவீச்சு இவருக்கு இந்திய அணியில் இடத்தையும் தேடி தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்ஸ்வால்:
இந்தியாவின் இளம் ஸ்டால்களில் நம்பிக்கை கூறியவராக விளங்கி வருபவர் ஜெய்ஸ்வால். சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் தனது அறிமுக போட்டியிலேயே சதம் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் வாழ்த்தியவர். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் பல சாதனைகளை புரிந்த இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அறிமுகமாக இருக்கிறார். இவரது வாழ்வின் ஆரம்ப காலங்கள் மிகவும் கடினமானவையாக இருந்தது . ஏழ்மையான சூழ்நிலையில் வளர்ந்த இவர் சிறு வயதில் பானி பூரி விற்றதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது. தற்போது ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியவற்றால் நல்ல பொருளாதார நிலைமையை அடைந்திருக்கிறார்.