லங்கா பிரிமியர் லீக் தொடரில் விளையாடியுள்ள 5 இந்திய வீரர்கள்

0
791
Manpreet Gony and Irfan Pathan LPL

2008ஆம் ஆண்டு பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்த தொடங்கியதற்கு பின்னர், உலக அளவில் அனைத்து ரசிகர்களாலும் இந்த ஐபிஎல் டி20 தொடர் மிகவும் ரசித்து பார்க்கப்பட்டது. பின்னர் மற்ற நாடுகளும் இந்தியாவைப் போன்று அவர்களது நாட்டில் டி20 தொடர் நடத்த ஆரம்பித்தனர்.ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் நடைபெறுவது போன்று, கடந்த ஆண்டு இலங்கையிலும் தனி டி20 தொடர் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

லங்கா பிரீமியர் லீக் என்கிற பெயரில் கடந்த ஆண்டு முதல் இந்த டி20 தொடர் நடைபெற தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் தொடரில் டம்புள்ளா வைக்கிங், கொழும்பு கிங்ஸ், ஜாஃப்னா ஸ்டால்லியோன்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் கண்டி டஸ்கெர்ஸ் என மொத்தமாக ஐந்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடின. தொடரின் முடிவில் ஜாஃப்னா ஸ்டால்லியோன்ஸ் முதல் லங்கா பிரீமியர் லீக் கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த ஆண்டு ஒரு சில சூழ்நிலை காரணமாக கடந்த ஆண்டு விளையாடிய பழைய 5 அணிகள் மத்தியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை மட்டும் தவிர்த்து, புதிய நான்கு அணிகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இந்தாண்டு காலி கிளாடியேட்டர்ஸ், டம்புள்ளா ஜெயினட்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ், ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கண்டி வாரியர்ஸ் என ஐந்து அணிகள் விளையாடின. ஜாஃப்னா ஸ்டால்லியோன்ஸ் அணியின் பெயர் ஜாஃப்னா கிங்ஸ்ஸாக மாறி இருந்தாலும், இந்த ஆண்டும் அந்த அணியே தொடர்ச்சியாக இரண்டாவது கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடரில் இலங்கை அணி வீரர்களை தவிர்த்து உலக அளவில் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்று விளையாட தொடங்கியுள்ளனர். இந்தத் தொடரில் ஒரு சில இந்திய வீரர்களும் இடம்பெற்று விளையாடி இருக்கின்றனர். அந்த வீரர்கள் யார் யார் என்று தற்பொழுது பார்ப்போம்.

மன்விண்டர் பிஸ்லா – கொழும்பு கிங்ஸ் 2020

2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியை பார்த்தவர்கள் அவ்வளவு எளிதில் இவரை மறந்து விட மாட்டார்கள். சென்னை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணிக்காக மிக சிறப்பாக விளையாடி, அந்த அணியை வெற்றிபெற மிகவும் முக்கிய காரணமாக விளங்கினார். ஐபிஎல் தொடரில் இவர் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் விளையாடிய இவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கடைசிவரை கிடைக்காமல் போனது. பின்னர் இந்திய அணியிலிருந்து தன்னுடைய ஓய்வு அறிக்கையை வெளியிட்டு, மற்ற தொடர்களில் கவனம் செலுத்த தொடங்கினார். 2020 ஆம் ஆண்டு கொழும்பு கிங்ஸ் அணி இவரை வாங்கியது. ஆனால் இறுதி நேரத்தில் ஒரு சில சூழ்நிலை காரணமாக இவரால் விளையாட முடியாமல் போனது.

முனாஃப் பட்டேல் – கண்டி டஸ்கெர்ஸ் 2020

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிக சிறப்பாக பந்து வீசியவர் முனாஃப் பட்டேல். அந்த ஆண்டு இந்திய அணி உலக கோப்பை தொடரை கைப்பற்றியது. அதுபோலவே 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக இவர் மிகச் சிறப்பாக விளையாடினார். அந்தத் தொடரில் ராஜஸ்தான் அணி இறுதியில் வெற்றி பெற்று முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

2020 ஆம் ஆண்டு முதல் இலங்கை பிரீமியர் லீக் தொடரில் கண்டி டஸ்கெர்ஸ் அனி மூலமாக இவர் வாங்கப்பட்டார். அந்த தொடரில் இவர் மொத்தமாக நான்கு போட்டிகளில் விளையாடினார். விளையாடிய 4 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை மட்டுமே முனாஃப் பட்டேல் கைப்பற்றியிருந்தார். அந்த ஆண்டு கண்டி டஸ்கெர்ஸ் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இர்பான் பதான் – கண்டி டஸ்கெர்ஸ்

2007ஆம் ஆண்டு இந்திய அணி முதல் டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது நம் அனைவருக்கும் தெரியும். அந்த தொடரில் இந்திய அணியில் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக இர்பான் பதான் தன்னுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். முனாஃப் பட்டேல் போன்று இவரும் கண்டி டஸ்கெர்ஸ் அனி மூலமாக 2020 ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் வாங்கப்பட்டார்.

நான்கு போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 54 ரன்கள் மட்டுமே இவர் குவித்தார். அந்தத் தொடரில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 90க்கும் கம்மியாக இருந்தது. பந்து வீச்சிலும் 3.5 ஓவர்கள் வீசி 39 ரன்கள் எதிரணி வீரர்களை குவிக்க வைத்தார். அந்த தொடரில் இவருடைய எக்கானமி விகிதம் 10.17 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மன்பிரீட் கோனி – கொழும்பு கிங்ஸ்

2020 ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் ட்ராஃப்ட் முறையில் கொழும்பு கிங்ஸ் மணி மூலமாக வாங்கப்பட்டார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவருக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

வாய்ப்பு கிடைத்த அந்த ஒரு போட்டியில் 4 ஓவர்கள் வீசி 42 ரன்கள் வாரிக் கொடுத்தார். அதன் பின்னர் லங்கா பிரிமியர் லீக் தொடரில் எந்த ஒரு போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.

சுதீப் தியாகி – டம்புள்ளா வைக்கிங்

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு சில ஆட்டங்களில் மிக சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இருப்பினும் அதன் பின்னர் பெரிய அளவில் இவரால் ஜொலிக்க முடியாமல் போனது.

கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் லங்கா பிரிமியர் லீக் தொடரில் டம்புள்ளா வைக்கிங் அணிக்காக களம் இறங்கினார். அந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டை கூட இவரால் இறுதிவரை கைப்பற்ற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.