“2019 WC-ல 5 சதம்.. இந்த WC-க்கும் அப்படியே வருவேன்” – கேப்டன் ரோஹித் சர்மா உறுதி!

0
385
Rohit

2011ம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதற்கடுத்து 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையில் கைப்பற்றியது.

மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து முற்றிலுமாக நகர, இந்தியா அணிக்கு அடுத்த ஆறு வருடங்களில் 2019 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருந்தது.

- Advertisement -

அந்த அணிக்கு இடது வலது கை துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா இருந்தார்கள். மூன்றாம் இடத்தில் பலமான விராட் கோலி இருந்தார். இறுதிக்கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தோனி இருந்தார். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருந்தார். பந்துவீச்சில் நல்ல பலம் இருந்தது. இதன் காரணமாக அந்த உலக கோப்பையை இந்தியா வெல்லும் என்று கணிப்பு இருந்தது.

அந்த உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக லீக் சுற்றில் மொத்தம் ஐந்து சதங்களை துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா விளாசினார். ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சதங்கள் விலாசிய வீரர் என்ற சாதனையைப் படைத்து 648 ரன்கள் மொத்தமாக குவித்தார்.

இந்திய அணி அரையிறுதி போட்டியின் முதல் பகுதி வரை மிக பலமாக இருந்தது. 240 ரன்களுக்கு நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்தி வெல்வதற்கு மிக அதிகபட்ச வாய்ப்பில் இருந்து, பந்துவீச்சுக்கு உகந்த சூழ்நிலையில் சிக்கி வெற்றியை இழந்து பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

தற்பொழுது இந்த உலகக் கோப்பை தொடர் குறித்து பேசி உள்ள கேப்டன் ரோஹித் சர்மா “2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்பாக நான் இருந்த கட்டத்திற்கு வர விரும்புகிறேன். அப்பொழுது நான் சிறந்த மனநிலையில் இருந்தேன். தொடருக்கு முழுமையாகத் தயாராகிவிட்டேன். நான் அப்பொழுது இருந்த நல்ல நிலை மற்றும் நல்ல மனநிலையை மீண்டும் இப்பொழுது கொண்டு வர விரும்புகிறேன். அதைச் செய்ய எனக்கு நேரம் இருக்கிறது.

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்பாக, ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும் நான் செய்த சரியான விஷயங்களை நினைவு படுத்த முயற்சிக்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னுடைய சிந்தனை மற்றும் செயல்முறையை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை நான் என்னை எப்படி நிதானமாக வைத்துக் கொள்கிறேன் என்பது முக்கியம். வெளியில் நடக்கும் விஷயங்களைப் பற்றி இந்த கவலையும் படாமல், எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட நினைக்கிறேன். அடுத்த இரண்டு மாதங்களில் எனது இலக்கை எப்படி அடைய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்!” என்று இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்!