இந்திய அணியில் 5 அதிரடி மாற்றம்.. திலக் வர்மாவுக்கு வாய்ப்பு.. உலகக் கோப்பை அணிக்கு காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

0
446
Rohit

இந்திய அணி இன்று ஆசியக்கோப்பையின் இரண்டாவது சுற்றில் தனது கடைசிப் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடுகிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவது என்று தீர்மானித்தார்.

- Advertisement -

இந்தத் தொடரில் இதுவரை இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்யவில்லை. அதேபோல் முதலில் பந்து வீசவில்லை. எனவே இறுதிப்போட்டி இதே மைதானத்தில் நடைபெற இருக்கின்ற காரணத்தினால், அதற்குப் பயிற்சியாக இன்று முதலில் பந்து வீசுவது என்று இந்திய அணி தீர்மானித்திருக்கிறது.

இந்த நிலையில் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள் இந்திய அணியில் இன்று நடைபெற்று இருக்கிறது. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, குல்தீப் யாதவ் சிராஜ் என ஐந்து பேருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதே சமயத்தில் இந்திய அணியில் இவர்களுக்கு பதிலாக இன்று சூரியகுமார் யாதவ், சர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி ஆகிய நான்கு வீரர்கள் விளையாடும் வாய்ப்பை பெறுகிறார்கள். மேலும் திலக் வர்மா இந்திய அணிக்காக முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.

- Advertisement -

இதில் மற்றொரு ஆச்சரியமாக காயத்தில் இருந்து நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்ட ஸ்ரேயாஸ் ஐயர் இன்றைய போட்டியில் விளையாட வைக்கப்படவில்லை. எனவே தற்பொழுது இவருடைய இடம் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. எனவே திலக் வர்மா உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது “நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். நாங்கள் இந்த தொடரில் இதுவரை முதலில் பந்து வீசவில்லை. எனவே மின் விளக்குகளின் கீழ் பேட்டிங் செய்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. விக்கெட் அனைவருக்கும் ஆனதாக நன்றாக கிடைத்து இருக்கிறது.

பகலில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல அசைவும், சுழற் பந்துவீச்சாளர்களுக்கு திருப்பமும் கிடைக்கும். வாய்ப்பு பெற்ற அனைவரும் தங்களது இயல்பான விளையாட்டை தைரியமாக விளையாட வேண்டும். விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இந்தப் போட்டியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா முக்கியமாக விளையாடவில்லை. ஷமி மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் வருகிறார்கள். சூரியகுமார் யாதவ் விளையாடும் வாய்ப்பை பெறுகிறார். மேலும் திலக் வர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வாய்ப்பை பெறுகிறார்!” என்று கூறியிருக்கிறார்!