தகுதி இருந்தும் உலகக்கோப்பை டி20 அணியில் இடம் கிடைக்காமல் போன 5 வீரர்கள்!

0
233

5. ராகுல் திரிபாதி

- Advertisement -

டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல ஏமாற்றமடைந்த கடைசி வீரராக இந்த பட்டியலில் இருப்பது ராகுல் திரிபாதி. அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் உடனான தொடரில் இவருக்கு இடம் கொடுக்கப்பட்டது. ஆனால் விளையாடும் 11 வீரர்களில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் தொடரிலும் மிகச் சிறப்பாக பங்காற்றி வருகிறார். இந்திய அணிக்காக விளையாடாத உள்ளூர் இந்திய வீரர்களில் இவர் தான் அதிக ரன்கள் அடித்தவர்களாகவும் இருக்கிறார். பேட்டிங்கில் மிடில் ஆர்டர் மற்றும் துவக்க வீரராக களம் இறங்கி அதிரடி வெளிப்படுத்தக்கூடிய திறம்படைத்த வீரர், கீப்பிங்கிலும அசத்தி வருகிறார். பண்ட் மற்றும் சாம்சன் இருவரும் செயல்படாததால் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் ஏமாற்றமாகவே முடிந்தது.

1
2
3
4
5