4வது டெஸ்ட்.. மீண்டும் 2 இந்திய நட்சத்திர வீரர்கள் விலகல்.. பிசிசிஐ மாற்றுவீரரை அறிவித்தது

0
998
Bumrah

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது 3 போட்டிகள் முடிவடைந்து இருக்க, இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலையில் இருக்கிறது.

இதற்கு அடுத்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் 4வது போட்டி பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரையும் வென்று விடும்.

- Advertisement -

எனவே இங்கிலாந்து அணிக்கு அடுத்து நடைபெறுகின்ற 4வது போட்டி வாழ்வா சாவா போட்டியாக அமைந்திருக்கிறது. ஒருவேளை இங்கிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில், தொடர் சமநிலைக்கு வந்து, ஐந்தாவது டெஸ்ட் போட்டி, தொடரை யாருக்கென்று முடிவு செய்யும் இறுதி போட்டி ஆக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இங்கிலாந்து நான்காவது போட்டியில் புதிய திட்டத்துடன் வந்து கடுமையாக மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர்களின் பாஸ்பால் அணுகுமுறையின் மீது பெரிய விமர்சனங்கள் இருந்து வருகின்ற காரணத்தினால், அவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தபடி அதிரடியைக் குறைத்து விளையாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணி நிர்வாகம் பனிச்சுமையை கருத்தில் கொண்டு அதிரடியாக ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது. ஆகாஷ் சோப்ரா மற்றும் சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் இந்த முடிவை எடுக்கக் கூடாது என்று முன்பிருந்து வலியுறுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பும்ரா இடத்துக்கு முகேஷ் குமார் பீகாரருக்கு எதிரான ரஞ்சி போட்டியை முடித்துக் கொண்டு இந்திய அணியில் இணைவார் என்று கூறப்பட்டிருக்கிறது

- Advertisement -

மேலும் கேஎல்.ராகுல் காயம் இன்னும் முழுமையாகக் குணம் அடைந்து அவர் முழு உடல் தகுதியைப் பெறாத காரணத்தினால், அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து மீண்டும் ரூல்டு அவுட் செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட தேவ்தத் படிக்கல் தொடர்வார்.

பும்ரா ஓய்வு குறித்து தெரிவித்துள்ள பிசிசிஐ ” நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா விடுவிக்கப்பட்டிருக்கிறார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடரின் காலம் மற்றும் சமீப காலங்களில் அவர் நிறைய கிரிக்கெட் விளையாடி இருப்பதை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறது.