4வது டெஸ்ட்.. அதிரடியாக பிளேயிங் XI வெளியிட்ட இங்கிலாந்து.. 2 முக்கிய வீரர்கள் நீக்கம்

0
2656
England

நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிகிரிக்கெட் மைதானத்தில், இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், நான்காவது போட்டி நடைபெற இருக்கிறது.

இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் இந்திய அணி இரண்டு போட்டிகளை வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்து அணி ஒரு போட்டியை மட்டும் வென்று இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக அடுத்து நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும் என்கின்ற நெருக்கடியில் இங்கிலாந்து இருக்கிறது. இல்லையென்றால் இங்கிலாந்து அணி தொடரை இழக்க நேரிடும்.

நான்காவது டெஸ்ட் போட்டிக்கு தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மார்க் வீட்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவருடைய இடத்தில் வேகப் பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

மேலும் இன்னொரு மாற்றமாக லெக் ஸ்பின்னர் ரேகான் அஹமத் நீக்கப்பட்டு, இளம் ஆப் ஸ்பின்னர் சோயப் பசீர் சேர்க்கப்பட்டிருக்கிறார். மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே இந்த மாற்றத்தை இங்கிலாந்து செய்திருக்க வேண்டும். ஜோ ரூட்டை ஆப் ஸ்பின்னர் ஆக நம்பி விளையாடி, அவர் நிறைய ரன்களை கசிய விட்டார். இதன் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சுதாரித்து இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் மூன்று டெஸ்ட் போட்டிகளாக தடுமாறி வரும் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ இடத்தில் டான் லாரன்ஸ் விளையாட வைக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் இருந்து வந்தன. ஆனால் ஸ்டோக்ஸ் அதை புறக்கணித்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் அட்டவணை எப்போது?.. முதல் போட்டியில் சிஎஸ்கே உடன் மோதுவது யார் தெரியுமா?

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான அதிகாரப்பூர்வமான இங்கிலாந்து பிளேயிங் லெவன் :

சாக் கிராலி
பென் டக்கெட்
ஒல்லி போப்
ஜோ ரூட்
ஜானி பேர்ஸ்டோ
பென் ஸ்டோக்ஸ் (கே)
பென் ஃபோக்ஸ் (வி.கீ)
டாம் ஹார்ட்லி
ஒல்லி ராபின்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
சோயப் பஷீர்