41 ஓவர்கள்.. கோலி 48வது சதம்.. பங்களாதேஷை பந்தாடியது இந்தியா.. புள்ளி பட்டியலில் அபாரம்.. அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்!

0
1101
Virat

இன்று இந்தியா அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், தனது நான்காவது ஆட்டத்தில் புனே மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அபாரமான முறையில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. அந்த அணிக்கு பேட்டிங்கில் துவக்க ஆட்டக்காரர்கள் தன்ஷித் ஹசன் 51, லிட்டன் தாஸ் 66 என சிறப்பான துவக்கம் தந்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து பங்களாதேஷ் அணிக்கு நஜிபுல் சாந்தோ 8, மெகதி ஹசன் மிராஸ் 3, தவ்ஹீத் ஹ்ரிடாய் 16, முஸ்பிக்யூர் ரஹீம் 38, மகமதுல்லா 46, நசும் அகமத் 14, முஸ்தஃபிஷுர் ரஹ்மான் 1, சோரிஃபுல் இஸ்லாம் 7 ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் பங்களாதேஷ் அணி எடுத்தது.

இந்திய அணியின் தரப்பில் பும்ரா 10 ஓவர்களுக்கு 41 ரன்கள் தந்து இரண்டு விக்கெட், ரவீந்திர ஜடேஜா பத்து ஓவர்களுக்கு 38 ரன்கள் தந்து இரண்டு விக்கெட், சிராஜ் பத்து ஓவர்களுக்கு 60 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் என கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு 40 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ரோகித் சர்மா அதிரடியான துவக்கம் தந்தார். அடுத்து சுப்மன் கில் 55 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து கேஎல்.ராகுல் ஆட்டம் இழக்காமல் 34 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து விராட் கோலி உடன் களத்தில் நிற்க, விராட் கோலி 97 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் குவித்து, 41.3 ஓவரில் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இது அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 48வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது புள்ளிப்பட்டியலில் நான்கு போட்டிகளில் நான்கு வெற்றிகள் உடன் 8 புள்ளிகள் எடுத்து, நியூசிலாந்து, இந்திய அணிகள் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றன. இதற்கு அடுத்து மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகள் உடன் 4 புள்ளிகள் எடுத்து, மூன்று மற்றும் நான்காம் இடங்களில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருக்கின்றன!