கடைசி 8 பந்தில் 4 விக்கெட்.. நாங்க இங்கிலாந்து இல்ல நியூசிலாந்து.. ஆப்கான் பொட்டலம்.. இந்தியா புள்ளி பட்டியலில் கீழே வந்தது!

0
2696
NZ

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை பனிப்பொழிவை காரணம் கொண்டு தேர்ந்தெடுத்தது. கடைசியில் அது மிக தவறான முடிவாக போய்விட்டது. மேலும் இந்த போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் விளையாடவில்லை.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு டெவோன் கான்வே 20, வில் யங் 54, ரச்சின் ரவீந்தரா 32, டேரில் மிட்சல் 1, டாம் லாதம் 68, கிளன் பிலிப்ஸ் 71, மார்க் சாப்மேன் 25, மிட்சல் சான்ட்னர் 7 ரன்கள் எடுக்க, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் வந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக் மற்றும் ஓமர்சாய் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு எந்த பேட்ஸ்மேனும் சரியான பங்களிப்பை கொடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாக 139 ரன்கள் மட்டும் எடுத்து 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் படுதோல்வி அடைந்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் 11, இப்ராஹிம் ஜட்ரன் 14, ரஹ்மத் ஷா 36, ஹசமத்துல்லா ஷாகிதி 8, ஓமர்சாய் 27, இக்ரம் அலிகில் 19*, முகமத் நபி 8, ரஷீத் கான் 7, முஜீப் 4, நவீன் உல் ஹக் 0, பரூக்கி 0 என ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

நியூசிலாந்து தரப்பில் லாக்கி பெர்குஷன் மற்றும் மிட்சல் சான்ட்னர் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். டிரண்ட் போல்ட் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணிக்கு இது நான்காவது வெற்றியாகும். இதன்மூலம் புள்ளி மற்றும் ரன் ரேட்டில் இந்தியாவை விட உயர்வு பெற்று முதலிடத்தை புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து கைப்பற்றியது.

கடைசி 8 பந்துகளில் 4 விக்கெட்டுகளை ஆப்கானிஸ்தான் இந்த போட்டியில் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில், நல்ல சுழற் பந்து வீச்சு தாக்குதலை வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிக்கு அச்சுறுத்தலை தரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் இந்தச் செயல்பாடு ஏமாற்றமான ஒன்றாக இருக்கிறது!