ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்த 4 வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகள்

0
142
WI

இன்று கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் ஒரு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமான ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டு இருக்கிறது. அது என்னவென்றால் ஒரே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 4 வீராங்கனைகள் தங்கள் ஓய்வை அறிவித்திருக்கிறார்கள்.

அனிஷா முகமது, ஷகேரா செல்மான் மற்றும் சகோதரிகளான கிசியா நைட் மற்றும் கிஷோனா நைட் என நான்கு வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வீராங்கனைகள் ஒரேநாளில் ஓய்வு முடிவை அறிவித்து விட்டார்கள்.

- Advertisement -

இதில் அனிஷா முகமது மற்றும் ஷகேரா செல்மான் துணை கேப்டனாக வெஸ்ட் இண்டிஸ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு இருந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மூத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீராங்கனைகள் ஆவார்கள்.

அனிஷா முகமது20 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்திருக்கிறார். 141 ஒருநாள் போட்டிகள் மற்றும் 117 டி20 போட்டிகளில் விளையாடி, ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் 180 விக்கெட்டுகள், டி20 கிரிக்கெட்டில் 125 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். ஆப் ஸ்பின்னரான இவரது வயது 35.

ஷகேரா செல்மான் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை 18 ஆண்டுகள் நீடித்திருக்கிறது. இவர் நூறு ஒருநாள் போட்டிகள் மற்றும் 96 டி20 போட்டிகள் விளையாடியிருக்கிறார். இரண்டு வடிவங்களிலும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் இரட்டை சகோதரிகளான கிசியா நைட் மற்றும் கிஷோனா நைட் இருவரும் ஓய்வு முடிவை அறிவித்தவர்களில் இருக்கிறார்கள். இதில் கிசியா 87 ஒருநாள் மற்றும் 70 டி20 போட்டிகளில் விளையாடி 2000க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. இந்திய வலிமையான பிளேயிங் லெவன் எதுவாக இருக்கும்?.. போட்டி அட்டவணை.. முழு அலசல்

இவரது சகோதரி கிஷோனா நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்காக விளையாடி மொத்தமாக 1397 ரன்கள் அடித்திருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தங்களது சர்வதேச வீராங்கனைகள் நான்கு பேர் ஓய்வு பெற்றதை ஒரே நேரத்தில் வெளியிட்டு இருப்பது கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது. அதே சமயத்தில் இவர்கள் நால்வருமே குறிப்பிட்ட காலத்திற்கு மேல் விளையாடி நல்ல முறையில் ஓய்வு பெறுகிறார்கள். தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.