ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து இந்திய அணிக்குப் பயிற்சியாளராக வர வாய்ப்புள்ள 4 நட்சத்திர பயிற்சியாளர்கள்!

0
16478
Dravid

மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிகளுக்கும் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் இருந்து வந்தார்கள்.

இவர்கள் இருவருமே தம் பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்ள, இவர்களுக்கு அடுத்து கேப்டனாக ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளராக விராட் கோலி ஆகியோர் வந்தனர்.

- Advertisement -

தற்பொழுது இவர்கள் இருவரின் செயல்பாட்டின் மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய அளவில் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக, அவரது பொறுப்புக்கு யார் வந்தாலல் மிகச் சரியாக இருக்கும்? என்று இந்தச் சிறிய கட்டுரைத் தொகுப்பில் பார்ப்போம்.

விவிஎஸ் லக்ஷ்மணன் :

- Advertisement -

இவர் தற்பொழுது நேஷனல் கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வருகிறார். மேலும் இந்திய அணி இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் விளையாடும் பொழுது ஒரு அணிக்கு பயிற்சியாளராகவும் பொறுப்பேற்று வருகிறார்.

நீண்ட கிரிக்கெட் அனுபவம் கொண்ட இவர் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் ஏதாவது முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.

ஜஸ்டின் லாங்கர் :

பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா அணியை மீட்டெடுத்து டி20 உலகக்கோப்பை வெள்ளை வைத்த வெற்றிகரமான ஆஸ்திரேலியா பயிற்சியாளரான இவர், கடுமையான பயிற்சி முறைகளை வலியுறுத்தியதால் சொந்த அணியினராலே புறக்கணிக்கப்பட்டவராக இருக்கிறார். ஆனால் இவர் பயிற்சியாளராக வருவார் என்றால் அது இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

ஆசிஸ் நெக்ரா :

கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் இல்லாது கிரிக்கெட் ஆய்வாளர்கள் கூட கணித்திடாத, குஜராத் டைட்டன்ஸ் அணியை உருவாக்கி, வெற்றிகரமாக வழி நடத்தி, ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்று மேலும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தையும் வென்ற, வெற்றிகரமான பயிற்சியாளராக இருக்கிறார், இந்த இந்திய முன்னாள் வீரர். யாரும் யோசிக்காத வகையில் திட்டமிடுதலும், அசராமல் அதை நோக்கி உழைப்பதிலும், வீரர்களோடு எந்தவித ஈகோவையும் காட்டாதவராக இருக்கிறார். எனவே இவர் கூட தேவைப்படும்பொழுதில் தேர்வில் இருக்கலாம்.

சந்திரகாந்த் பண்டிட் :

முன்னாள் இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான இவர் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக இருக்கிறார். இவர் வழிநடத்திய மும்பை, பரோடா மற்றும் மத்திய பிரதேஷ் அணிகள் தொடர்ந்து ரஞ்சி கோப்பையை வென்றுள்ளன. தற்பொழுது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய அணி புதிய பயிற்சியாளரை தேடும்பொழுது இவரது பெயரும் விருப்பத்தில் இருக்கும்.