இந்தியாவின் தோல்விக்கு 4 முக்கிய காரணங்கள்.. சரி செய்வாரா ராகுல் டிராவிட்

0
45

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வரலாற்று தோல்வியை பதிவு செய்தது. இதில் இந்திய அணி சொதப்பியதற்கான காரணங்களை தற்போது பார்க்கலாம். விசாகப்பட்டினம் ஆடுகளம் ஒண்ணும் பேட்டிங்கிற்கு கடினமான ஆடுகளம் கிடையாது. பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனதை கூட எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணிவீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

மிச்செல் ஸ்டார்க் வீசிய இன்ஸ்விங் பந்துகளை எதிர் கொள்ள முடியாமல் இந்திய வீரர்கள் பெவிலியன் திரும்பினர். பந்து ஸ்டெம்புக்கு உள்ளே வரும்போது அதனை அடித்து ஆடுவது மிகப்பெரிய கலை. ஆனால்  ஸ்டார்க் அசுர வேகத்தில் அந்த லைனில் பந்து வீசும் போது இந்திய வீரர்கள் எலி போல் சிக்கிக் கொள்கின்றனர்.

இதனை சரி செய்ய வேண்டும் என்றால் டாப் ஆர்டரில் குறைந்தது இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள்  ஆவது இருக்க வேண்டும். தற்போதுள்ள இந்திய அணியில் ஜடேஜாவும் அக்சர் பட்டேல் மட்டும்தான் இடதுகை வீரர்களாக இருக்கிறார்கள். இதனால் ஜடேஜாவை நடுவரசையில் களம் இறக்குவது அவசியம்.

அதேபோன்று ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பினால் அந்த சிக்கல் தீர்ந்துவிடும். நேற்று இந்திய அணி வீரர்கள் செய்த ஒரு தவறு பார்ட்னர்ஷிப் அமைக்காமல் விரைவாக ஆட்டமிழந்தது தான். எதிரணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசும் போது நாம் விக்கெட்டுகளை இழந்தாலும் 300 ரன்களுக்கு மேல் தான் அடிப்பேன் என்பது போல் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டுகளை இழந்து விடுகின்றனர்.

- Advertisement -

அதற்கு பதில் விக்கெட்டை கொடுக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி இருந்தால் பந்து கொஞ்சம் பழையதாக மாறி இருக்கும். அந்த தருணத்தில் இந்திய வீரர்கள் அடித்து ஆடி இருக்கலாம். ரோகித் சர்மா, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தேவையில்லாத கவனக்குறைவான ஷாட்களை ஆடி தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதில் ஹர்திக் பாண்டியாவின் கேட்ச் மிகவும் சிறப்பானது என்பதால் அதனை கூட மன்னித்து விட்டு விடலாம் .

ஆனால் மற்ற வீரர்கள் கவனகுறைவாக  இப்படி ஷாட் ஆடுவது அணிக்கு சரிவையே கொடுக்கும். சூரிய குமார் யாதவ் தொடர்ந்து கோல்டன் டக் ஆவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சூரியகுமார் போன்ற வீரர்கள் நடு வரிசையில் தங்களது திறமையை வெளிக்காட்டாமல் மோசமாக விளையாடி வருவது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.