உலகக்கோப்பைக்கு முன்பாக நாடு மாறி விளையாடிய 4 பிரபல வீரர்கள்!

0
1525
World cup

பொதுவாக உலக கிரிக்கெட் நாடுகள் ஒரு உலகக் கோப்பை தொடருக்கு தயாராவது என்பது குறைந்தபட்சம் ஒரு வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு விடும். 2019 50 ஓவர் உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2015ஆம் ஆண்டிலிருந்தே உருவாக்கப்பட்டது.

இப்படி உலகக்கோப்பையை வைத்து உருவாக்கப்படும் அணியில் குறைந்தது மூன்று வீரர்கள் ஆவது மாற்று வீரர்கள் யாரையும் கொண்டு நிரப்ப முடியாத அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். மேலும் ஒரு உலகக் கோப்பை தொடரில் தங்கள் நாட்டிற்காக அணியில் இடம் பெறுவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு ஆகும். இந்தக் கட்டுரைத் தொகுப்பில் உலக கோப்பைக்கு முன்பாக நாடு மாறி விளையாடிய 4 கிரிக்கெட் வீரர்களைப் பற்றி நாம் பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

இயான் மார்கன் இங்கிலாந்து:

இவர் பிறந்த நாடு அயர்லாந்து ஆகும். இவர் முதலில் அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகி சர்வதேச போட்டிகளில் விளையாடினார். 2009ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டனாக உயர்ந்து 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று, சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து :

- Advertisement -

இந்த அபாயகரமான வேகப்பந்துவீச்சாளர் பிறந்த இடம் வெஸ்ட்இண்டீஸ் தீவுக் கூட்டங்களில் ஒன்றான பார்படாஸ். இவர் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை, ஆனால் இங்கிலாந்து அணியில் அறிமுகம் ஆவதற்கு, தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து கவுன்டி போட்டிகளில் விளையாடி வந்தார். பின்பு இவருக்காகவே இங்கிலாந்து விளையாட்டு சட்டம் திருத்தப்பட்டு, இவர் 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இங்கிலாந்து அணியில் இடம் பெற்றார்.

டிம் டேவிட் ஆஸ்திரேலியா :

- Advertisement -

இவர் பிறந்தது வளர்ந்தது கிரிக்கெட் விளையாடியது சர்வதேச போட்டிகளில் அறிமுகமானது எல்லாமே சிங்கப்பூர் நாட்டிற்காக ஆகும். இவரது தந்தை தொழிலுக்காக ஆஸ்திரேலியா குடிபெயர்ந்த காரணத்தால் இவரும் ஆஸ்திரேலியா சென்று தங்கினார். பின்பு உலகம் முழுவதும் நடக்கும் டி20 தொடர்களில் கலந்துகொண்டு மிகச்சிறப்பாக விளையாட ஆரம்பித்தார். இதனையடுத்து இவருக்கு ஆஸ்திரேலியா டி20 அணியில் இடம் தருவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் யோசிக்க ஆரம்பித்தது. சமீபத்தில் இவரை ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கின்ற டி20 உலகக்கோப்பை அணியில் சேர்த்து அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்ற இவர் ஆஸ்திரேலிய அணிக்காக முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை விளையாடினார், இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக முதல் சர்வதேச அரைசதம் அடித்தார்.

எட் ஜாய்ஸ் அயர்லாந்து:

இவரின் கதை சற்று வித்தியாசமானது. மற்றவர்கள் எல்லாம் தங்கள் பிறந்த நாட்டை விட்டு மற்ற நாடுகளுக்கு உலக கோப்பைக்கு முன்பாக இடம்பெற்ற விளையாடியவர்கள். இவர் அயர்லாந்தில் பிறந்து முதன்முதலில் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். பின்பு இங்கிலாந்து அணியில் வாய்ப்புகள் குறைய, 2011ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பைக்காக தனது சொந்த நாடான அயர்லாந்துக்கு விளையாட ஐசிசி இடம் வேண்டுகோள் வைத்தார். அதற்கு ஐசிசி சம்மதிக்க இவர் அந்த ஆண்டு உலகக்கோப்பையில் அயர்லாந்து அணிக்காக விளையாடினார்!