அனைத்து ஐ.பி.எல் சீசனில் பங்கேற்றும் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத 4 வீரர்கள்

0
227
Ajinkiya Rahane and Virat Kohli

உலகில் உள்ள டி20 தொடர்களிலே ஐ.பி.எலுக்கு தான் பெரிதாக கருதப்படுகிறது. மேலும் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட தொடரும் இது தான். இந்தியன் பிரீமியர் லீக்கில் கலந்து கொள்ள வேண்டுமென்ற கனவு அனைத்து கிரிக்கெட் வீரர்களிடம் தென்படும். ஆனால் உள்ளூர் போட்டிகள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பிக்கும் வீரர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் கிடைக்கும். தலைசிறந்த வீரர்கள் பலருக்கு ஐபி.எலில் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இன்னும் ஒரு சில வீரர்கள் அவ்வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

2008 முதல் 2021 வரை நடந்த தொடரில் மும்பை 5 முறை, சென்னை 4 நான்கு முறை, கொல்கத்தா 2 முறை மற்றும் டெக்கான், ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் தலா முறையும் கோப்பையை வென்றுள்ளது. இக்கட்டுரையில், 14 ஆண்டுகள் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றும் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத 4 வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

விராட் கோஹ்லி

இந்திய கேப்டன் விராட் கோஹ்லி இப்பட்டியலில் இருப்பது ஆச்சரியமான ஒன்று அல்ல. இந்தியன் பிரீமியர் லீகில் பெங்களூர் அணி ஆடிய முதல் போட்டியிலேயே கோஹ்லி களமிறங்கினார். இதுவரை ஐ.பி.எலில் 6283 ரன்கள் அடித்துள்ளார். இத்தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரரும் இவரே. 2021 ஐ.பி.எலுடன் கேப்டன் பதவியில் இருந்தும் அவர் விலகிக்கொண்டார். கேப்டனாக விராட் கோஹ்லியால் ஒரு கோப்பையை கூட கைப்பற்ற இயலவில்லை என்பது தான் சோகமான விஷயம்.

ஏபி டிவில்லியர்ஸ்

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு பெங்களூர் வீரர், தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த டிவில்லியர்ஸ். ஐ.பி.எலில் இவர் 2 அணிகளுக்காக ஆடியுள்ளார். முதலில் டெல்லி டேர்டெவில்ஸ், பிறகு 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை ஆர்.சி.பி அணியில்ஆஆடி வருகிறார். ரசிகர்களால் 360° என்றழைக்கப்படும் ஏபிடி, ஐ.பி.எலில் தான் பெயருக்கு பின்னால் பல சாதனைகளை வைத்துள்ளார். இருப்பினும் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இவரும் கோஹ்லியும் இணைந்து ஐ.பி.எல் டிராபியை முத்தமிட வேண்டுமென்பது பெங்களூர் ரசிகர்களின் ஆசை. அடுத்த ஆண்டு அது நிறைவேறும் என்று எதிர்பார்க்கலாம்.

அமித் மிஷ்ரா

இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக விக்கெட்டுகள் ( 166 ) எடுத்த ஸ்பின்னர் என்ற பெருமையை அமித் மிஷ்ரா பெற்றுள்ளார். அது மட்டுமில்லாமல் ஐ.பி.எலில் அவர் மூன்று முறை ஹாட்ரிக் சாதனையும் படைத்துள்ளார். இத்தொடரில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்த இரு இந்திய வீரரும் கோப்பை வெள்ளவில்லை என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. அமித் மிஷ்ரா தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் உள்ளார். அவரது முன்னாள் அணிகளான டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சாம்பியன் பட்டம் வெல்லும்போது அவர் அணியில் இல்லை.

- Advertisement -

அஜிங்கிய ரஹானே

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனான ரஹானே ஐ.பி.எலில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 4 அணிகளில் ஆடியுள்ளார். இதுவரை 2 சதங்களும் விளாசியுள்ளார். 2020 & 2021ம் ஆண்டு டெல்லி அணியில் அவருக்கு பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2017ல் ஐ.பி.எல் கோப்பையை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தவறவிட்டார்.