4-0-20-5.. சூப்பர் கிங்சை அசால்டாக சுருட்டிய ஆர்சிபி பவுலர்.. போட்டியின் முடிவு?

0
415
Tsk

தற்பொழுது அமெரிக்காவில் ஆறு அணிகளை கொண்டு மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில், இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 தொடர் போலான டி20 தொடர் நடத்தப்படுகிறது. இதில் மொத்தம் 15 ஆட்டங்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஆறு அணிகளில் நான்கு அணிகளை ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி உள்ள சென்னை, கொல்கத்தா, மும்பை, மற்றும் டெல்லி ஆகிய ஐபிஎல் அணி நிர்வாகங்கள் வாங்கி இருக்கின்றன.

- Advertisement -

இன்று இந்திய நேரப்படி காலையில் நடந்த ஒரு போட்டியில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அமெரிக்க தொடரில் வாங்கி உள்ள டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், சீட்டில் ஆர்கஸ் அணியும் மோதின.

இதில் முதலில் டாஸ் வென்ற சீட்டில் ஆர்கஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்த அணியின் கேப்டனாக ஆர்சிபி அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான தென்னாப்பிரிக்க வீரர் வெயின் பர்னல் நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆர்சிபி அணியின் கேப்டனான பாப் டு பிளசிஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை ஒட்டுமொத்தமாக சீட்டில் ஆர்கஸ் அணியின் கேப்டன் வெயின் பர்னல் தன்னுடைய பந்துவீச்சில் சரித்தார். அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். கேப்டன் பாப் 13 ரன்கள் மட்டும் எடுத்தார். அந்த அணிக்கு அதிகபட்சமாக டுவேன் பிராவோ 39 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் 39 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

20 ஓவர்கள் முடிவில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. சீட்டில் ஆர்கஸ் அணியின் தரப்பில் நான்கு ஓவர்களுக்கு 20 ரன்கள் தந்து ஐந்து விக்கெட்டுகளை பர்னல் வீழ்த்தினார்.

தொடர்ந்து சிறிய இலக்கை நோக்கி விளையாடிய சீட்டில் ஆர்கஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்க இடது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் 36 பந்துகளில் தலா மூன்று பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் உடன் 53 ரன்களும், தென் ஆப்பிரிக்காவின் மற்றும் ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஹென்றி கிளாஸன் 21 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 42 ரன்கள் எடுக்க, பதினாறு ஓவர்களில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸ் அணியை அசால்டாக வீழ்த்தியது சீட்டில் ஆர்கஸ் அணி.

நடைபெற்று வரும் இந்த தொடர் முழுக்கவே விறுவிறுப்புக்கும் போட்டி தரத்திற்கும் குறைவில்லாமல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பேட்ஸ்மேன்கள் சுலபமாக ரன்கள் எடுக்க முடியாதது மட்டும் இல்லாமல், பந்துவீச்சு தரமும் மிகச் சிறப்பாக வெளிப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த தொடர் நல்ல ஒரு விருந்தாக அமைந்திருக்கிறது.