3வது டெஸ்டில் வென்ற வெறியோடு இருக்கிறோம், 4வது டெஸ்டில் வெற்றி எங்களுக்கு தான் – ஆஸ்திரேலியா பயிற்சியாளர் பேட்டி!

0
536

மூன்றாவது டெஸ்டில் பெற்ற வெற்றி எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது, நான்காவது டெஸ்டிலும் வெற்றியை பெறுவோம் என பேசியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட்.

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாக்பூர் மற்றும் டெல்லி மைதானங்களில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியும், இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது.

- Advertisement -

தற்போது வரை இந்த டெஸ்ட் தொடரானது இந்திய அணியின் பக்கம் 2-1 என்ற கணக்கில் இருக்கிறது. தொடர் சமன் செய்யப்படுமா? அல்லது இந்தியா வெற்றி பெறுமா? என்பதை முடிவு செய்யும் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் வருகிற மார்ச் ஒன்பதாம் தேதி துவங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. ஏனெனில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி செயல்பட்ட விதம் மிகச் சிறப்பாகவும், ஆதிக்கம் செலுத்துவது போலவும் இருந்தது.

ஆனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் எடுத்த சில தவறான முடிவுகளால் பின்னடைவை சந்தித்து இறுதியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை பெறுவதற்கு வழிவகுத்தது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி பெற்ற இந்த மகத்தான வெற்றியை குறிப்பிட்டு, நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்த உத்வேகத்துடன் விளையாடி வெற்றி பெறுவோம் என பேசியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட். அவர் கூறியதாவது:

“இந்திய மைதானங்களில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் 100 சதவீத ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் அதை கச்சிதமாக செய்தனர். இதனால் மகத்தான வெற்றி கிடைத்தது. இந்த வெற்றி புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. இதே உத்வேகத்துடன் செயல்பட்டு நான்காவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு முனைப்புடன் இருக்கிறோம்.”

“ஆஸ்திரேலியா அணியினர் செய்த பயிற்சி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் எடுபடவில்லை என்பது வருத்தத்தை கொடுத்தாலும், விடாமுயற்சியினால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அந்த வெற்றியை பெற்று விட்டார்கள். அவர்களது கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாக இதை நான் பார்க்கிறேன். நான்காவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு அனைத்து திட்டங்களும் செய்து வருகிறோம்.” என்று பேசினார்.