3வது ODI.. 2 வீரர்கள் ரிலீஸ்.. 2 வீரர்கள் ரெஸ்ட்..1 வீரர் வருகை.. பிளானை மாற்றும் இந்திய அணி நிர்வாகம்!

0
12713
ICT

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை, நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளை வென்று, இந்திய அணி கேஎல்.ராகுல் தலைமையில் அதிரடியாகக் கைப்பற்றி இருக்கிறது.

இந்த தொடருக்கு அணி அறிவிக்கப்படும் பொழுது முதல் இரண்டு போட்டிகளுக்கு ஒரு அணியும், கடைசி போட்டிக்கு ஒரு அணியும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

முதல் இரண்டு போட்டிகளுக்கு நட்சத்திர வீரர்கள் இல்லாமல் கே.எல்.ராகுல் தலைமையிலும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டிக்கு வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர்கள் கொண்ட அணியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாளை சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ராஜ்கோட் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்கு இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, குல்தீப் யாதவ் ஆகியோர் அணிக்குத் திரும்புகிறார்கள். அதே சமயத்தில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய கில் மற்றும் சர்துல் தாக்கூர் இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் துவக்க வீரராக முதல் இரண்டு ஆட்டத்தில் வாய்ப்பு பெற்ற ருதுராஜ், இரண்டாவது போட்டிக்கு முன்பாக வீட்டிற்கு சென்ற பும்ராவுக்கு பதிலாக அணிக்குள் வந்த முகேஷ் குமார், இந்த இருவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அதே சமயத்தில் மூன்றாவது போட்டிக்கு நட்சத்திர இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா திரும்ப வருகிறார். மேலும் மூன்றாவது போட்டியில் அக்சர் படேல் காயம் சரியாகாத காரணத்தினால் விளையாடவில்லை. ஆனால் அவர் பயிற்சி போட்டிகள் முடிவடைவதற்குள் குணமடைந்து விடுவார் என்றும், குணமடையாவிட்டால் அந்த இடத்தில் அஸ்வின் வருவார் என்றும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

தற்பொழுது கில் மற்றும் சர்துல் தாக்கூர் ஓய்வு எடுக்கிறார்கள். ருதுராஜ் மற்றும் முகேஷ் குமார் இருவரும் இந்திய அணியில் இருந்து ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக விடுவிக்கப்படுகிறார்கள். தனிப்பட்ட காரணங்களுக்காக வீட்டிற்கு சென்று இருந்த ஜஸ்ப்ரித் பும்ரா அணிக்கு திரும்புகிறார்.

நடைபெற இருக்கும் மூன்றாவது போட்டியில் இசான் கிஷான் துவக்க வீரராக ரோகித் சர்மா உடன் களம் இறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் சிறப்பாக விளையாடி சதம் அடித்த ஸ்ரேயாஸ் அணியில் இடம் பெறவும் வாய்ப்பு இருக்கிறது. கே எல் ராகுலுக்கு ஓய்வு கொடுத்து சூரியகுமார் அணியில் தொடரவும் வாய்ப்பு இருக்கிறது. விராட் கோலி நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்!