37 ஓவர்கள்.. முதல் சதம்.. கடைசியாக வென்றது இங்கிலாந்து.. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும் அணிகள் எது?

0
10283
England

இன்று இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே புனே மைதானத்தில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் போட்டி நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குத் தகுதிபெற இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இங்கிலாந்துக்கு மிகவும் முக்கியமான போட்டி.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. இந்த முறையும் அந்த அணிக்கு நட்சத்திர பேட்ஸ்மேன்கள் பேர்ஸ்டோ 15, ரூட் 28, ஹாரி ப்ரூக் 11, ஜோஸ் பட்லர் 5, மொயின் அலி நான்கு என ஏமாற்றினார்கள்.

இன்னொரு பக்கத்தில் துவக்க ஆட்டக்காரர் டேவிட் மலான் அதிரடியாக 74 பந்துகளில் 87 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 84 பந்துகளில் 108 ரன்கள், கிறிஸ் வோக்ஸ் 51 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்தது. உலகக் கோப்பையில் பென்ஸ் ஸ்டோஸ்க்கு இது முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய நெதர்லாந்து அணிக்கு வெஸ்லி பரேசி 37, சைப்ரான்ட் 33, எட்வார்ட்ஸ் 38, தேஜா 41* என குறிப்பிடுபடியான இரண்டு எடுத்தார்கள். மற்ற யாரும் குறிப்பிடும்படியான ரன்கள் எடுக்கவில்லை. இறுதியில் நெதர்லாந்து 37 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொயின் அலி மற்றும் ஆதில் ரசீத் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

எட்டாவது போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். அதே சமயத்தில் எட்டாவது போட்டியில் விளையாடிய நெதர்லாந்து அணியும் இரண்டு வெற்றிகள் பெற்றிருக்கிறது.

இரண்டு அணிகளும் சமமான புள்ளிகள் எடுத்து இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் பலமாக இருக்கும் இங்கிலாந்து 7வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. நெதர்லாந்து அணி 10வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இங்கிலாந்து, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, நெதர்லாந்து என 4 அணிகள், 8 ஆட்டங்களில் 4 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் 7 முதல் 10 இடங்களில் இருக்கிறார்கள். முதல் 8 இடங்களில் வரும் அணிகள் மட்டுமே பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபியில் விளையாட முடியும்.

இந்த வகையில் தற்பொழுது இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகள் பாதுகாப்பாக ஏழு மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கின்றன. இந்த நான்கு அணிகளும் கடைசி போட்டியில் விளையாடி முடிக்கும் வரை, கடைசி நான்கு இடங்களில் யார் வருவார்கள் என்பது உறுதி செய்ய முடியாததாக இருக்கிறது. இங்கிலாந்து அணி ஓரளவிற்கு தனது இடத்தை ரன் ரேட் மூலம் பாதுகாப்பு செய்திருப்பதாக இருக்கிறது. மற்ற அணிகளுக்கு கடைசி போட்டி முக்கியமானதாக அமைந்திருக்கிறது!