37 ஓவரில் மடக்கி 34 ஓவரில் வெற்றி.. ஆப்கானிஸ்தான் அணியை அசால்டாக சுருட்டி வீசியது பங்களாதேஷ்!

0
719
Bangladesh

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில், முதல் போட்டி இமாச்சல் பிரதேஷ் தர்மசாலா மைதானத்தில், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் பந்துவீச்சை தேர்வு செய்தது. பந்துவீச்சுக்கு கொஞ்சம் சாதகமான சூழ்நிலை கொண்ட தர்மசாலா மைதானத்தில், ஆப்கானிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்கள் நிதானமான அதே சமயத்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியின் குர்பாஸ் 47 மற்றும் இப்ராகிம் ஜட்ரன் 22 ரன் இருவரும் வெளியேறி செல்ல, அங்கிருந்து ஆப்கானிஸ்தான் அணி அப்படியே சரிந்தது.

அந்த அணியில் ரஹமத் ஷா 18, ஹசமத்துல்லா 18, நஜிபுல் ஜட்ரன் 5, முகமது நபி 6, ஓமர்சாய் 22, ரஷீத் கான் 9, முஜிப் உர் ரஹ்மான் 1, நவீன் உல் ஹக் 0, பருக்கி 0* ரன்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான அணி 37.2 ஓவரில் 154 ரன்களுக்கு சுருண்டது. பங்களாதேஷ் தரப்பில் கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் மெகதி ஹசன் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் தன்ஷித் ஹ்சன் 5, லிட்டன் தாஸ் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். ஆரம்பத்தில் விக்கெட்டுகள் விழ ஆட்டத்தில் கொஞ்சம் உயிர் இருப்பதாகத் தெரிந்தது.

- Advertisement -

ஆனால் இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த நஜிபுல் சாந்தோ மற்றும் மெகதி ஹசன் இருவரும் சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடி அணியை கரை சேர்த்தார்கள். மெஹதி ஹசன் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் சகிப் அல் ஹசன் 14 ரன்களுக்கு வெளியேறினார்.

இறுதிவரை ஆட்டமிலக்காமல் களத்தில் நின்ற நஜிபுல் சாந்தோ 83 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து, 34.4 ஓவர்களில் இலக்கை எட்டி பங்களாதேஷ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு உலகக் கோப்பை முதல் போட்டியில் வெற்றி பெற வைத்தார். முஸ்பிக்யூர் ரஹீம் ஆட்டம் இழக்காமல் 2 ரன்கள் உடன் களத்தில் இருந்தார்.

பங்களாதேஷ் அணி உலகக்கோப்பைக்கு முன்னதாக கேப்டனாக இருந்து திடீரென விலகிய தமிம் இக்பால் பிரச்சனையில் திணறி இருந்தது. மேலும் அவர் ஒரு வீரராகவும் உலகக்கோப்பையில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறினார். ஆனாலும் இந்த உலகக் கோப்பையில் பங்களாதேஷ் ஆபத்தான அணியாக இருக்கும் என்று பலர் கணித்ததற்கு சரியாக, அந்த அணி விளையாடி இருக்கிறது!